Thursday, March 17, 2016

கிளாந்தான் மாநில புதிய ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக டத்தோ மோ சம்சுடின் யூசோப் தேர்வு

கிளாந்தான் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின்  புதிய இயக்குநராக  டத்தோ மோ சம்சுடின் யூசோப் நேற்று காலை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இம்மாநில முன்னாள் இயக்குநர் டத்தோ ஹஜி அப்துல் அஸிஸ் அபானுக்கு பதிலாக மோ சம்சுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

மோ சம்சுடினின் புதிய பதவி ஏற்பு நேற்று காலை கிளாந்தான் மாநில ஊழல் தடுப்பு அலுவலகத்தில் நடைப்பெற்றது.

முன்னதாக மோ சம்சுடின் விலாயா பெர்செக்குத்துவான புத்ராஜயாவின் மாநில இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்ராஜயாவின் புதிய இயக்குநராக அதுல் அஸிஸ் மாற்றம் கண்டுள்ளார்.

இதனிடையே கிளாந்தானில்  தமது பிரியாவிடை உரையாற்றிய அப்துல் அஸிஸ், குறைந்த செலவில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களை உழல் தடுப்பு ஆணையம் செயல்படுத்தி வந்ததாக குறிப்பிட்டார்.

இதுவரையில் கிளாந்தான் ஊழல் தடுப்பு ஆணையம், பெருநிறுவன நாணயதன்மை உறுதிமொழி (சி.ஐ.பி), மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு வழங்குதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்தூவம் வழங்கி வருந்தாக குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment