Tuesday, September 29, 2015

இரு கடற்படை வீரர்கள் லஞ்சக் குற்றச்சாட்டை மறுத்தனர்


புலனாய்வுத் துறை அதிகாரி மீது லஞ்சக் குற்றச்சாட்டு


இந்தியாவின் ஐந்தாவது தூண் இயக்கம்


கெவின் வழக்கு; அறுவர் மீது குற்றச்சாட்டு


கெவின் வழக்கு; டாக்டர் குணா யார்?


கெவின் வழக்கு; அறுவருக்கு காவல் நீட்டிப்பு


கெவின் வழக்கில் மேலும் இருவருக்கு வலைவீச்சு


காணமற்போன கெவின் கொலை செய்யப்பட்டார்


கெவின் கொலை வழக்கு


Monday, September 28, 2015

ஊழல் எதிர்ப்பு வீரர்கள் நிகழ்ச்சி பினாங்கு தமிழ் பள்ளியில்......

ஊழல் சமுதாயத்தின் எதிரி என்பது அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் இத்தகைய தெளிவு நம்மில் பலருக்கு காலம் கடந்தே ஏற்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.

வரக்கூடிய காலங்களில் ஊழலின் ஆபத்தையும், ஊழலால் ஏற்படும் விளைவுகளையும் சமுதாயத்தினர் குறிப்பாக இளையோர் பள்ளி பருவத்திலிருந்தே அறிந்திருப்பது மிக மிக அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆரம்பப் பள்ளிகளில் ஊழல் எதிர்ப்பு வீரர்கள் எனும் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

மாணவப் பருவம் தொடங்கியே இது போன்று ஊழல் தொடர்பான தெளிவுகளை அவர்களில் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடைப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இம்முறை பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள  சுப்பிரமணிய பாரதி ஆரம்ப தமிழ்பள்ளியில் பினாங்கு மாநில ஊழல் தடுப்பு  ஆணையம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.

பள்ளியின் நான்காம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

கல்வியைத் தவிர்த்து இது போன்ற சமுதாய சிந்தனையையும் மாணவர்களுக்கு புகட்டுவதன் மூலம் வருங்காலத்தில்  ஊழலற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.

இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கை நிருபர்களிடம் பேசியிருந்த பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ சாமரஜூ மாணிக்கம், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தபடுவதால் நல்ல விஷயங்கள் மாணவர்கள் மூலம் மற்ற இளையோருக்கும் சென்று சேரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tuesday, September 22, 2015

அந்தோனி கெவின் மொராயிஸ் நினைவாக.......

 காலஞ்சென்ற அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அந்தோநி கெவின் மொராயிஸின் பெயரையும் புகழையும் வருங்கால சந்ததியினர் மறந்து விடாமல் இருக்க தலைநகரில் அமைந்துள்ள மலேசிய ஊழல் தடுப்பு அக்கெடெமி (MACA) வின் கற்பனை நீதிமன்றத்திற்கு அவருடைய பெயர் சூடப்பட்டுள்ளது.

இனி அது கேவின் மொராயிஸ் கற்பனை நீதிமன்றம் என்று அழைக்கப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) உயர் ஆணையர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

கெவினின் அர்பணிப்பையும், தொழில் மீது அவர் வைத்திருந்த பற்றையும் நினைவுக்கூறும் வகையில் எதிர்வரும் அக்டோபர் முதலாம் தேதி எஸ்.பி.ஆர்.எம் மின் 48 ஆவது பிறந்தநாளையொட்டி சிறு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  எஸ்.பி.ஆர்.எம் அமலாக்க பிரிவு துணை ஆணையர் டத்தோ ஶ்ரீ ஷுக்ரி அப்துல் தெரிவித்தார்.

MACA- வில் அடிப்படை பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு சட்டம் மற்றும் வழக்குகள் குறித்த பயிற்சிகளை வழங்குவதற்காக இந்த கற்பனை நீதிமன்றம் உறுவாக்கப்பட்டது . 

இதனிடையே எஸ்.பி.ஆர்.எம் தரப்பில் கெவின் ஆஜராகியிருந்த  வழக்குகள் குறிப்பாக இராணுவ மருத்துவ அதிகாரி சம்பந்தப்பட்ட வழக்கு எஸ்.பி.ஆர்.எம்- மின் மற்றுமொரு துணை வழக்கறிஞரால் வாதாடப்படும், என ஷுக்ரி குறிப்பிட்டிருந்தார்.

கெவினின் இழப்பு எஸ்.பி.ஆர்.எம் மற்றும் நாட்டிற்கே ஏற்பட்டிருக்கும் பேரிழப்பாக கருதப்படும் போதிலும், தொடர்ந்து இது எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள்   தத்தம் கடமைகளை செய்வதிலுருந்து நிச்சயம் தடுக்காது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

   

Wednesday, September 9, 2015

ஊழலை எதிர்த்து புத்ராஜெயாவின் உறுதி மொழி. . . .




வெற்றிகரமாக நடந்து முடிந்த 16-வது அனைத்துலக ஊழல் தடுப்பு மாநாட்டில் ஊழலை எதிர்த்து எட்டு உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்டன

மாநாட்டில் கலந்து கொண்ட சுமார் 130 நாட்டு பிரதிநிதிகளின் ஒரு சேர்ந்த உறுதிமொழியாக நிகழ்ச்சியின் முடிவு விழாவில் இது அறிவிக்கப்பட்டது.

அவை எட்டில் முதலாவதாக ஊழலை தடுக்கும் வன்ணம் பல வித நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஊழல் பெற்றவர் அதற்கான தண்டனையை தவிர்த்து, பெற்ற ஊழல் தொகையை முற்றிலும் மக்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
 
அடுத்து, பெற்ற தொகையையோ அல்லது அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சொத்துக்களையோ மீட்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க முடிவதோடு, ஊழல் தொடர்பாக ஏற்பட்ட சேதத்தையும் ஈடு செய்ய முடியும்

ஊழல் மூலம் பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அவசியம், ஏனெனில் இது எந்த விதத்திலும் ஊழலில் சம்பந்த்தப்பட்ட நபர் ட்டத்தை மீறி அந்த சொத்துக்களை அனுபவிப்பதில் இருந்து தடுக்கும்.

அனைத்துலக கடப்பிதழ் மற்றும் விசா முதலியவற்றை பயன்படுத்தி ஊழலில் சம்பந்தப்பட்டவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.  

லஞ்சம் தொடர்பான குற்றங்கள் அனைத்துலக அளவில் கடுங்குற்றங்களாக அறிவிக்கப்படும் அதே வேளையில் அதில் தொடர்புடையவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவதும் உறுதிச் செய்யப்பட வேண்டும். 

அனைத்துலக ரீதியில் கையூட்டுக் கொடுப்பது மற்றும் வாங்குவது முதலிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு தனிப்பட்ட சட்ட திட்டங்களுக்குள் வரையப்பட வேண்டும். 

இதனிடையே லஞ்சமாக பெற்ற சொத்துக்களைத் தனிப்பட்ட நிறுவனங்கள் வாயிலாக பதுக்கி வைக்கும் சில தரப்பினரின் நூதனமான முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும்.  
   
இதைத் தவிர்த்து வங்கித் தரப்பும் பண மோசடிக்கு எதிரான சட்ட திட்டங்களை முடுக்கி விடுவதோடு, இது தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து மேலோங்குவதை தடுக்க முயல வேண்டும். 

 



Tuesday, September 8, 2015

அரசாங்க அமலக்க பிரிவுகளுக்கும் சுயேட்சை அமைப்புகளுக்கும் நல்ல புரிந்துணர்வு தேவை


மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்டு வந்த சில விசாரணைகள் அவ்வாணையத்திற்கு பெரும் சவாலாக இருந்து வந்ததுஇருப்பினும் அந்த சுயேட்சை அமைப்பு மிக நூதனமான மற்றும் சாமர்த்தியமான முறையில் அந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டது பலரின் கவனத்தை ஈர்த்த்து.

பிரச்சனையின் உச்சக்கட்டமாக எஸ்.பி.ஆர்.எம்மின் இரு உயர் அதிகாரிகள் பிரதமர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அந்நிலை ஏற்பட்ட சில மணி நேரங்களில் மலேசியர்களில் பலர் அதனை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஒரு வகையில் இது அந்த ஆணையத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியோடு கூடிய இலவச விளம்பரம் எனலாம்.

மக்களின் கடும் எதிர்ப்புகள் மற்றும் அவ்வாணையத்தின் துணை உயர் ஆணையர் ஒருவரின் விட்டுக்கொடுக்காத மற்றும் எந்நேரமும் தனது அதிகாரிகளை பாதுக்காக்கும் தன்மையும், அவ்விரு உயர் அதிகாரிகளும் மீண்டும் தத்தம் பழைய பதவிகளில் தக்க வைப்பதற்கு பெருந்துணை புரிந்த்து.

முன்னதாக எஸ்.பி.ஆர்.எம் பிரதமர் துறையின் கீழ் தனித்த சுந்தந்திரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என பலரும் அரைக்கூவல் விடுத்து வந்தனர். அஃது பொய்யான ஒரு கூற்று என நடந்து முடிந்த இச்சம்பவங்கள் தெள்ளத் தெளிவாக புலப்படுத்தி விட்டன.
சுயேட்சையாகத் தான் ஒரு அமைப்பு செயல்படுகிறது என்பதற்கு இதனிலும் சிறந்த உதாரணம் ஒன்று தேவையா என்பது கேள்விகுறியே!

இதனிடையே நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல் நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படுவது திண்ணம்.’ அதோடு மட்டுமில்லாது, இது வரையில் ஏஸ்.பி.ஆர்.எம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்த ஒரு சதித் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை, இனியும் நிச்சியம் அது நடக்காதுஎன எஸ்.பி.ஆர் எம்மின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆணையம் சவால்மிக்க காலக்கட்டத்தை கடந்து வந்து கொண்டிருந்த சமய சந்தர்ப்பங்களில் உடல் நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டிருந்த அவரால் தொடர்ந்து வேண்டிய தலைமைத்தூவ உதவிகளைத் தர முடியாததை எண்ணியும் அவர் வருந்தியிருந்தார்.இருப்பினும் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அநாவசியப் பிரச்சனைகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.

இந்நிலையில் 1 எம்.டி.பி விசாரணைத் தொடர்பான தகவல்கள் கசிந்த விவகாரத்தில் மேலும் பல எஸ்.பி.ஆர் .எம் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த காவல் துறை சூழ்நிலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளது.இதனை நல்லதொரு முடிவென எஸ்.பி.ஆர் .எம் தரப்பு வரவேற்றுள்ளது.

இதில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எஸ்.பி.ஆர் .எம் தனது கடமையைச் செய்வதிலிருந்து தவறியதாக தெரியவில்லைஆனால் அந்த சுயேட்சை அமைப்பை அதன் பணியை செய்யவிடாமல் சில தரப்புகள் தடுப்பது மட்டும் உறுதியாக புலப்படுகிறது.

தொடர்ந்தாற்போல் அவ்வாணையத்தின் பல அதிகாரிகள் தடுத்து வைக்கப்படுவதோடு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாலும்எஸ்.ஆர்.சி தொடர்பான விசாரணைகள் மேலும் தாமதமாவது குறிப்பிடத்தக்கது.

இதனால் விசாரணை தாமதமாவதாக பொது மக்கள் பலர் எஸ்.பி.ஆர் .எம் மீது குறைப்பட்டு கொள்வதையும் தவிர்க்க இயலாத நிலை ஏற்படுகிறது.
காவல் துறை அதன் கடமையை செய்வது இயல்பு என்ற போதிலும் சில சமயங்களில் அது எஸ்.பி.ஆர் .எம்மின் விசாரணைகளுக்கு இடையூராக இருப்பது மறுப்பதற்கில்லை.

எதிர் வரும் காலங்களில் இது போன்ற அரசாங்கத்திற்கு நேரடி தொடர்புடைய  அமலாக்க பிரிவுகள் மற்றும் நாட்டின் சுயேட்சை ஆணையங்களுக்கு இடையில் விசாரணை அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பது மிக அவசியம்இதுவே அநாவசிய கருத்து வேறுபாடுகளை களைய வழிவகுக்கும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட விசாரணையை விரைவில் தீர்க்கவும் துணைப்புரியும்.

இதனிடையே விசாரணை ரீதியில் எஸ்.பி.ஆர்.எம் முழுக்க முழுக்க சுயேட்சையாக செயல்பட்டு வரும் போதிலும், அவ்வாணையத்தின் அதிகாரிகள் நியமனம், இடம் மாற்றம், மற்றும் பணியிட அலுவல்கள் ஆகியவையும் தனிபட்ட முறையில் அமைக்கப்படுவதே மிகச் சிறப்பு.

தற்போது எஸ்.பி.ஆர்.எம் பொதுச் சேவைத் துறையின் கீழ் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததேஇது மாற்றப்பட வேண்டும். பொதுச் சேவை துறை அன்றி, தனி ஒரு சிறப்பு சேவையின் கீழ் இவ்வாணையம் அமைக்கப்பட்டால் இது முழு சுதந்திரமாக அமையும் என்பது திண்ணம்.

இதனைத் தவிர்த்து, எஸ்.பி.ஆர்.எம் மின்  உயர் ஆணையரின் நியமனமும் முழுவதுமாய் சுதந்திரமாக அரசர்களின் சபையில் முடிவு செய்யப்பட வேண்டும்எஸ்.பி.ஆர்.எம் மின் உயர் ஆணையருக்கு, நாட்டின் சட்ட துறை தலைவருக்கு நிகரான பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் எஸ்.பி.ஆர் எம் எந்நிலையிலும் எந்த தரப்பினருக்கும் தலை வணங்காமல் தனது கடமைகளை சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செய்ய முடியும் என நிரூபிக்கலாம்.

தொடர்ந்து, எஸ்.பி.ஆர். எம் மின் சில ஆலோசனைகளும் அரசியல் சாசனத்திலும், நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுவது மிக முக்கியம்.
குறிப்பாக தேர்தலுக்காக்கவும், கட்சி நலன் கருதியும் வழங்கப்படும் நன்கொடைகள் கட்டாயம் கட்சியின் பொது வங்கிக் கணக்கில் மட்டுமே போடப்படுவதுடன் அது குறித்த வெளிப்படையாக ஒப்புதல்களும் தரப்பட வேண்டும்.

அந்த நன்கொடை பணத்தின் செலவறிக்கைகளும் கட்டாயம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அதன் கணக்கறிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்கள் ஏற்கனவே எஸ்.பி.ஆர்.எம்- ஆல்,பலமுறை பரிந்துரைக்கப்பட்டும், இன்னமும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கபடாமல் இருப்பது சற்று வருத்தமளிக்கவே செய்கிறது

கூடிய விரைவில் இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கும் வரும் என எதிர்ப்பார்போம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வலுத்து வரும் ஊழல் குற்றங்களைக் களைவதில் எஸ்.பி.ஆர்.எம் நிச்சயம் ஒரு படி முன்னோக்கிச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.