Monday, November 30, 2015
Thursday, November 19, 2015
ஊழலை ஒழிக்க சமயமும் நல்வழி வகுக்கும்
மதங்கள் மனிதனுக்கு தவறான விஷயங்களையும் கருத்துக்களையும் எப்போதுமே
போதிப்பதில்லை. பொய் சொல்லுதல், திருடுதல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுதல், இவை
எதையுமே உலகின் எந்த ஒரு மதமும் ஆதரிப்பதில்லை.
சில நேரங்களில் நல்ல விஷயங்கள் புகட்டபடுவதற்கு மதம்,
சமயம் போன்றவை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்
இஸ்லாத்தும் ஊழல் குற்ற விவகாரங்களும் எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.
இஸ்லாமிய ரீதியில் ஊழல் குற்றங்கள் குறித்த விளக்கங்களும், விழிப்புணர்வும் அளிக்கும் வகையில் அந்த புத்தக வெளியீடு அமைந்திருந்தது.
ஊழல் குறித்த விழிப்புணர்வை விளக்கக்கூடிய நபி முகமது மற்றும்
அவரது நண்பர்களின் கதையை பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் மலேசியாவில் ஊழல்
தடுப்பு ஆணையத்தின் பரிணாம உருமாற்ற வளர்ச்சியையும் அந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.
இதனிடையே இந்த புத்தக வெளியிடு மலேசிய ஊழல் தடுப்பு
ஆணையத்தின் மற்றுமொரு தடுப்பு நடவடிக்கையாக அமையும் என அதன் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.
எல்லா மதத்திலும் லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும்
குற்றமாகவே கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் பலன் எதிர்ப்பார்த்து
செய்யக்கூடாது என்பது பெரியோரின் வாக்கு.
இருப்பினும் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தத்தம்
கடமையையை செய்வதற்கே லஞ்சம் பெரும் பங்காற்றுகிறது. பணமோ, பொருளோ அவரவர் தேவைக்கேற்றவாறு
வழங்கப்பட்ட பிறகுதான் பலர் தங்களது வேலையைச் செய்யவே ஆரம்பிக்கின்றனர்.
மேலும் பலர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கும் லஞ்சம்
வழிவகுக்கிறது. பதவியில் மற்றும் குறிப்பிட்ட அதிகாரத்தில் இருக்கும் சிலர் பதவியை
தவறாக கையாளுவதற்கு கோரும் வெகுமதி லஞ்சம்.
இந்த நெறியற்ற கொள்கை நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு சமயம் வாயிலாகாவும் கட்டாயம் வழியுள்ளது என்பது பெரும் உண்மை.
பிரதமர் அழைக்கப்படுவார் – எம்.ஏ.சி.சி தகவல்
எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷினல்
மற்றும் 2.6 பில்லியன் ரிங்கிட் விவகாரம் தொடர்பாக பிரதமரின் விளக்கங்களைப் பதிவு செய்ய
டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் அழைக்கபடுவார் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர்
ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர்
அலுவலகத்தை தமது தரப்பு தொடர்பு கொண்டு விட்டதாகவும், அவரிடம் தேவைப்படும் விளக்கங்களைப் பெறுவதற்கு
எம்.ஏ.சி.சி தயாராக உள்ளதாகவும் அபு காசிம் உறுதிப்படுத்தினார்.
எஸ்.ஆர்.சி விவகாரத்தில்
முக்கிய சாட்சிகளாக கருதப்படும் இருவர் இன்னமும் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்கள்
இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுவிட்டால் இவ்வாண்டு இறுதிக்குள் இவ்விவகாரம் தொடர்பான
விசாரணையை முடித்து விட முடியும் என எம்.ஏ.சி.சி நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவ்விரு முக்கிய
சாட்சிகளும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாதது எந்த விதத்திலும் பிரதமரின் விளக்கங்களை எம்.ஏ.சி.சி பதிவு செய்வதை தடுக்காது என அபு காசிம் தெளிவுபடுத்தினார்.
எஸ்.ஆர்.சி குறித்த
விசாரணை அனைத்துக் கோணங்களிலும் நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர் விசாரணையை குறிப்பிட்ட
நேரத்திற்குள் முடிப்பதற்கு தமது அதிகாரிகள் கடுமையாக போரடி வருவதாகவும் சொன்னார்.
இதனிடையே 2.6 பில்லியன் ரிங்கிட் விசாரணை விவகாரம் அனைத்துலக வங்கிகளில் பணப்பட்டுவாடாக்களைச் சம்பந்தப்படுத்தி இருப்பதால்
அது முடிவுக்கு வருவதற்கு தாமதம் ஆகலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த விசாரணை நடத்தி
முடிக்கப்படுவதற்கு இரு தரப்பு தொடர்பான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு மிக அவசியம்
என்றார், அவர்.
இந்த ஒத்துழைப்பைப் பெறுவதற்கு எம்.ஏ.சி.சி-க்கு
சற்று கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் சொன்னார்.
தொடர்ந்து விசாரணை
குறித்த முடிவுகளும் அவ்வப்போது எம்.ஏ.சி.சி – யின் நடவடிக்கைகளை கண்கானிக்கும் சுயேட்சை
அமைப்புகளிடம் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
ஊழலை களைவதில் அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் ஈடுபாடு அவசியம்
ஊழல் ஆரோக்கியமற்ற சமுதாயத்தின் அடையாளம்.
இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை முற்றாக அழிக்க கூடிய சக்தி படைத்தது.
சின்ன சின்ன தவறுகளை மூடி மறைக்கவும், தனிபட்ட ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சாதகாமன செயல்களைச் செய்யவும், அதிகாரத்தில் இருப்பவருக்கு வழங்கப்படும் அரோக்கியமற்ற சன்மானம் இந்த ஊழல்.
இதனைக் களைவது அவசியம். ஆனால் அதனிலும் மிக முக்கியம் இந்த ஊழல் குறித்த விழிப்புணர்வை வழங்குவது. சமுதாயத்தில் பாராபட்சம் இன்றி அனைவருக்கும் இந்த ஊழல் கடுங்குற்றம் என புகட்டப்பட வேண்டும்.
இது சமுதாய கடப்பாடு நிறைந்த ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பு மற்றும் கடமை. இதனை தனி மனித கடமையாக கருதி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இருப்பினும் இத்தகைய விழிப்புணர்வு திட்டங்களை பெரிய அளவில் சமுதாய விளிம்புகளுக்கு கொண்டுச் செல்வதற்கு அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் உதவி மிக அவசியம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அனைத்துலக தொடர்பு குழு தலைவர் திரு கருணாநிதி சுப்பையா தெரிவித்தார்.
பல சமயங்களில் எம்.ஏ.சி.சி யின் சமுதாய கல்வி பிரிவு நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்கி வருகிறது.
இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகளில் ஊழல் தடுப்பு குறித்த விஷயங்களையும் இணைத்துக் கொள்வது முக்கியம் என கருணாநிதி வலியுறுத்தினார்.
இவ்வாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய விரும்பும் இந்திய இயக்கங்களும் மற்றும் பல பொது இயக்கங்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
Sunday, November 1, 2015
Subscribe to:
Posts (Atom)














