Saturday, January 30, 2016

உண்மை தெரியும் வரை விசாரணை


பாக்சைட் பற்றி ஏராளமான புகார்கள்


போலி மருத்துவ சான்றிதழ்


விசாரணை அறிக்கை ஒப்படைப்பு


பதவி மாற்றம் இல்லை


மின்னியல் சேவைகள் கையூட்டுகளை குறைக்கும்


தலைமை ஆணையர் பதவியில் நீடிப்பு


ஊழலை தடுக்க புதிய சுற்றறிக்கை


விசாரணை அறிக்கை தாக்கல்


மூன்று போலீஸ்காரர்கள் மீது குற்றச்சாட்டு


சமூக நல அதிகாரி மீது குற்றச்சாட்டு


ரபிஸிக்கு எம்.ஏ.சி.சி யின் பதில்


அறுவர் கைது


பதவி மாற்றம் இல்லை


மூன்றாம் தரப்பினர் தலையீடு இல்லை


ஜேபி ஜே அதிகாரி குற்றச்சாட்டை மறுத்தார்


Thursday, January 21, 2016

பாக்சைட் விவகாரத்தில் பெரிய புள்ளிகளுக்கும் சம்பந்தம் உள்ளதா?

பாக்சைட் சுரங்க நடவடிக்கைத் தொடர்பான விசாரணைகளில் இருந்து எந்த  தரப்பினரும் தப்பி விட முடியாது.

சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாக்சைட் விவகாரத்தில் பாகுபாடற்ற விசாரணை மேற்கொள்ளப்படும் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குவாந்தான் பாகாங்கில், பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்திய பாக்சைட் சுரங்க நடவடிக்கைகளில்  உயர் பதவிகளை வகித்து வருபவர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அஸாம் தெரிவித்தார்.

இதனிடையே பாக்சைட் விவகாரத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் மெத்தன போக்கை கடைப்பிடித்து வருவதா சில தரப்பினர் கூறும் கருத்துகள் உண்மையற்றது என அவர் சொன்னார்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைத் தொடர்பான சரியான தகவல்களை திரட்டுவதில் தமது தரப்பு பல சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் ஒத்துழைப்பு கிடைத்து வரும் போதிலும் இதில் முற்றாக சம்பந்தப்பட்டவர்கள் குறித்த விவரம் ஏதும் மக்கள் வழங்க தவறியது மிகப் பெரிய சவாலாக அமைவதாக அவர் கூறினார்.

இதனிடையே  இந்த பக்சைட் விவகாரம் தொடர்பாக மாநில நில மற்றும் கணிமவள அலுவலகத்திலிருந்து நால்வர் ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக அஸாம் தெரிவித்தார்.








நான் பதவி விலக போவதில்லை - டான் ஶ்ரீ அபு காசிம்

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது அந்த பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், மற்றுமொருவர் அவருக்கு பதிலாக அப்பதவியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் சமூக வளைத்தல தகவல் ஊடகங்களிள் வெளி வந்துள்ள செய்திகள் தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தமது தரப்பு பெறவில்லை என எம்.ஏ.சி.சி தெரிவித்துள்ளது.

முன்னதாக அபு காசிம் உடல் நலக் குறைவினால் அவரது பதவியிலிருந்து  மாற்றப்பட உள்ளதாக வதந்தியான செய்தி வெளிவந்தது.

அதற்கு பதிலளிக்கும் வண்ணம் அவர் தமது பதவி காலம் முடியும் வரையில் தொடர்ந்து அவ்வாணையத்திற்காக சேவையாற்றவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது நாட்டின் மிக பெரிய ஊழல் வழக்குகளை எம்.ஏ.சி.சி விசாரித்து வரும் இவ்வேளையில் அதன் உயர் ஆணையர் பதவி விலக வேண்டும் என நெருக்குதல்கள் வலுத்து வருவதாக எழுந்துள்ள ஆரூடங்களுக்கும் அபு காசிம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

"தற்போது என்னை பதவி விலக கோரி எந்த வித நெருக்குதல்களும்  பெறப்படவில்லை, நானும் என் பதவி காலம் முடியும் வரை பதவி விலக போவதும் இல்லை. எல்லாவற்றையும் விட நான் வகித்திருக்கும் பொறுப்பு தான் மிக முக்கியம். "

தொடர்ந்து தாம் பதவி விலகவோ அல்லது ஓய்வு பெறவோ விண்ணப்பிக்கவில்லை. ஆனால் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பது ஒட்டியும் தமக்கு தெரியாது என அவர் கூறினார்.

தாம் அரோக்கியமாக இருக்கும் வரையில் எம்.ஏ.சி.சி- க்கு தொடர்ந்து தலைமை ஏற்க போவதாகவும் அவர் தெரிவித்தார். 

Tuesday, January 19, 2016

எஸ்.ஆர்.சி தொடர்பான விசாரணை அறிக்கைகள் எம்.ஏ.சி.சி யிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எம்.ஏ.சி.சி),  எஸ்.ஆர்.சி இண்டர்நேஷினல் தொடர்பாக சட்ட துறை தலைவர் டான் ஶ்ரீ அப்பாண்டி அலியிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை அப்பாண்டி தரப்பினர் எம்.ஏசி.சி யிடம் திரும்ப கொடுத்துள்ளானர். 

 அந்த வழக்கு தொர்டர்பாக  தமது தரப்புக்கு தேவைப்படும் கூடுதல் விளக்கங்களை எம். ஏ.சி.சி அழிக்க வேண்டும் என சட்டத்துறை தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே சட்டத்துறை அலுவலகத்திலிருந்து அந்த விசாரணை  அறிக்கையைத் தமது தரப்பு பெற்று விட்டதாக எம்.ஏ.சி.சி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.

அப்பாண்டி கேட்டுக் கொண்டுள்ளதற்கு இணங்க அவரது தரப்புக்குத் தேவைப்படும் கூடுதல் விளக்கங்களுடன் கூடிய விரைவில்  அந்த விசாரணை அறிக்கை மீண்டும் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என எம்.ஏ.சி தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக  எஸ்.ஆர்.சி இண்டர்நேஷினல் விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது எம்.ஏ.சி.சி மொத்தம் 37 பரிந்துறை  குற்றசசாட்டுகளை முன்வைத்துள்ளது என சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியை எம்.ஏ.சி.சி முற்றாக மறுத்துள்ளது.




Monday, January 4, 2016

நீதிமன்றத்தால் குற்றவாளி என குறிப்பிடப்பட்டவர்களின் பெயர் மட்டுமே "Name and Shame பட்டியலில் இடம் பெறும்

ஒருவரின் குற்றம் நீதிமன்றத்தில் செவிமடுக்கப்பட்டு,  அவர் குற்றவாளி என  தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரே குறிப்பிட்ட ஒருவரின் பெயர் Name and Shame பட்டியலில் இடம் பெறும்.

அதனை விடுத்து,  ஒருவர் மீதான குற்றச்சாட்டு பெறபட்ட பின்னரோ அல்லது அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு கொண்டிருக்கும் போதோ அவரது பெயரை அந்த பட்டியலில் இணைப்பது சரியாகாது.

ஏனெனில் இன்னும் அந்த நபர் மீதான குற்றச்சாட்டு முடிவுக்கு வராத ஒரு நிலையில் அவரது பெயர் அந்த பட்டியலில் இடம் பெறுவது நியாயமான ஒரு செயலாக அமையாது.

முன்னதாக கெலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங் அவரது சமூக வளைத்தளத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - கின் பெயர்  Name and Shame பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இருப்பினும் நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என அறிவித்தப் பின்னரே அவ்வாறு செய்ய இயலும் என்பது சட்டத்திற்கு உட்பட்ட உண்மை.