மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எம்.ஏ.சி.சி), எஸ்.ஆர்.சி இண்டர்நேஷினல் தொடர்பாக சட்ட துறை தலைவர் டான் ஶ்ரீ அப்பாண்டி அலியிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையை அப்பாண்டி தரப்பினர் எம்.ஏசி.சி யிடம் திரும்ப கொடுத்துள்ளானர்.
அந்த வழக்கு தொர்டர்பாக தமது தரப்புக்கு தேவைப்படும் கூடுதல்
விளக்கங்களை எம். ஏ.சி.சி அழிக்க வேண்டும் என சட்டத்துறை தலைவர் கேட்டுக்
கொண்டுள்ளார்.
இதனிடையே சட்டத்துறை அலுவலகத்திலிருந்து அந்த விசாரணை அறிக்கையைத் தமது தரப்பு பெற்று விட்டதாக எம்.ஏ.சி.சி அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளது.
அப்பாண்டி கேட்டுக் கொண்டுள்ளதற்கு இணங்க அவரது தரப்புக்குத் தேவைப்படும் கூடுதல் விளக்கங்களுடன் கூடிய விரைவில் அந்த விசாரணை அறிக்கை மீண்டும் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும் என எம்.ஏ.சி தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக எஸ்.ஆர்.சி இண்டர்நேஷினல் விவகாரம் தொடர்பாக பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மீது எம்.ஏ.சி.சி மொத்தம் 37 பரிந்துறை குற்றசசாட்டுகளை முன்வைத்துள்ளது என சரவாக் ரிப்போர்ட் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியை எம்.ஏ.சி.சி முற்றாக மறுத்துள்ளது.
No comments:
Post a Comment