Monday, February 22, 2016

201 5 ஆம் ஆண்டு சவால்களை எம்.ஏ.சி.சி-யின் வியூக தொடர்பு குழு சாமர்த்தியமாக கையாண்டது



2015 ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வியூக தொடர்பு குழுவுக்கு முழுவதுமாய் ஒரு சவால்மிக்க ஆண்டாக அமைந்ததாக அதன் தலைவர் டத்தோ ரோஹைசாட் யாக்கோப் தெரிவித்தார்

கடந்த ஆண்டு முழுவதும் வெவ்வேறு நிலைகளில் ஏற்பட்ட பல்வேறு சவால்களை தமது குழு எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்

குறிப்பாக, எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல், 260 கோடி ரிங்கிட் விவகாரம், ஆணையத்தின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது உடல் நலம் குறைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது, எம்..சி.சி யின் இரு இயக்குனர்களின் பதவி மாற்றம்,  அனைத்துலக ஊழல் தடுப்பு மாநாட்டின் ஏற்பாடுகள், கேமரன் மலையில் சட்ட விரோத நடவடிக்கைகள் என்பவை சந்தித்த சவால்களுல் அடங்கும் என்றார் அவர்

2015 ஆம் ஆண்டு எழுந்த பல சவால் மிக்க விவகாரங்களை தமது தரப்பு மிகச் சிறப்பாக கையாண்டதாக அவர் தெரிவித்தார்

எம்..சி.சி யில் மிக அண்மையில் துவங்கப்பட்ட ஒரு குழுவான போதிலும் கடந்த ஆண்டு முழுவதிலும் ஏற்பட்ட மிக பெரிய சவால்களை மிகச் சாமர்த்தியமாக தமது குழு கடந்து வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்

சமீபத்தில் எம்..சி.சி யின் அதிகாரப்பூர்வ வானொலியான எம்..சி.சி எஃப்.எம் மிற்கு வழங்கிய சிறப்பு நேர்கானலின் போது அவர் இவ்வாறு கூறினார்.




Monday, February 15, 2016

எம்.ஏ.சி.சி எப் எம் மின் தமிழ் நேர ஒலிபரப்பை கேட்க தவறாதீர்கள்!




மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வானொலி எம்..சி.சி எப் எம் கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே செயல் பட தொடங்கி விட்டது அனைவரும் அறிந்ததே.   

மாலாய், ஆங்கிலம், சீன மொழி மற்றும் தமிழ் மொழி என நான்கு மொழிகளும் ஊழல் குறித்த தகவல்களோடு இந்த அலைவரிசை தினமும் ஒலிபரப்பாகிறது

சிறந்த பாடல்கள், இடையிடையே நல்ல பல தகவல்கள், ஊழல் குறித்த  விழிப்புணர்வு அம்சங்கள், ஊழல் தடுப்பு அதிகாரிகளின் நேர்கானல்கள் என பல அற்புதமான விஷயங்களை தாங்கி மலர்கிறது எம்..சி.சி எப் எம் மின் நிகழ்ச்சிகள்

இதில் குறிப்பாக தமிழ் நேர ஒழிபரப்பு, ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்திய அதிகாரிகளை மகிழ்விப்பதோடு பொது மக்களுக்கும் மிகப் பெரிய பயன்களை கொண்டு வரும் என்பதே ஊழல் தடுப்பு ஆணையத்தின் நம்பிக்கை

வரக்கூடிய காலங்களில் ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணி புரியும் இந்திய அதிகாரிகள் உடனான நேர்கானல்களும் இதில் இடம் பெறவிருப்பது தமிழ் நேர ஒலிபரப்பிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஊழல் எதிர்ப்பு துறையில் அவர்கள் கடந்து வந்த அனுபவங்கள், இத்துறையில் அவ்வதிகாரிகள் கற்று கொண்ட விஷயங்கள் என பல புதிய விஷயங்களையும் மக்களோடு பகிர்ந்து கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.   

Thursday, February 11, 2016

ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு ஊழல் குறித்த கல்வி அறிமுகம்



இளமையிற் கல்வி சிலைமேல் எழுத்து என்பது பண்டைய அறிய மொழிகளுள் ஒன்று. இளமையில் எண்ணம், சிந்தை மற்றும் புத்தி ஆகியன தெளிந்த நீரோடைப் போல இருக்கும்
 
இந்த இளையப் பருவத்தில் கற்று தேர வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களையும் தாமதிக்காமல் கற்று விட வேண்டும். எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் இந்த பருவத்தில் அதிகமாக இருக்கும். இந்த வயதில் கற்கும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து போல் அழியாது மனதில் பதிந்து இருக்கும்

ஊழலைக் களைவதில் இளையோருக்கு தகுந்த பாடத்தைப் போதிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்..சி.சி) மேற்கொண்டிருக்கும் புதிய முயற்சியும் இப்பழமொழிக்கு ஏற்ப அமைந்திருக்கிறது

ஆறாம் ஆண்டு மாணவர்களின் நன்னெறி மற்றும் இஸ்லாமிய பாட புத்தகத்தில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து இணைத்திருப்பது பாரட்டத்தக்க ஒரு செயல்

இப்புதிய பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் கொண்டு அமலுக்கு வரவிருக்கிறது.  இந்த திட்டம் மாணவர்களுக்கு பல வகையில் நன்மையை புகட்ட தவறாது என, எம்..சி.சி யின் ஊழல் தடுப்பு பிரிவு துணை ஆணையர் டத்தோ முஸ்தாபார் அலி தெரிவித்தார்

குறிப்பாக இந்த ஆண்டு ஆறாம் ஆண்டு பாட புத்தகத்தில், ஊழல் என்பதன் விளக்கம்,  ஊழல்களின் வகைகள், ஊழலுக்கான காரணங்கள், அவற்றால் ஏற்படும் விளைவுகள், ஆவற்றுகுறிய தண்டனைகள் ஆகியன குறித்து விவரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்

இதனிடையே, பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஊழல் குறித்த தகவல்கள் ஒட்டி கற்பிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் சொன்னார்.

இத்தகைய நல்ல முயற்சிகள் நிச்சயம் ஆரோக்கியமான சிந்தனைக் கொண்ட வளமான எதிர்கால சந்ததியினரை உறுவாக்கும் என்பது திண்ணம்.