Thursday, March 31, 2016
Friday, March 25, 2016
முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு அதிக சுய ஒழுக்கம் தேவை
முக்கிய
பொறுப்புகளில்
இருப்பவர்கள் தமது பதவிகளுக்கென்று இருக்கும் கௌரவத்தைக் காப்பற்றிக் கொள்வது அவசியம். ஒருவர் மீது ஒரு தனிபட்ட நிறுவனம் கொண்டுள்ள நம்பிக்கைதான் அந்நிறுவனம் அவருக்கு வழங்கும் உயர் பதவிகளும் பொறுப்புகளும்.
அப்படி
வழங்கப்படும் ஒவ்வொரு பொறுப்புகளுக்கும் தனிபட்ட கௌரவம் மற்றும் மரியாதை உண்டு. வழங்கப்பட்ட அத்தகைய பொறுப்புகளிலிருந்து விலகும் வரை அதற்குரிய கன்னியத்தை காப்பாற்றுவது மிக முக்கியம்.
நாம்
வகிக்கும் பொறுப்பும், அந்த பொறுப்பில் இருந்து கொண்டு நாம் செய்யும் நன்மை தீமைகளும் நம்மை மட்டுமன்றி நமது நிறுவனத்தையும், அதில் பணியாற்றும் மற்ற ஊழியர்களையும் பாதிக்கும் என்பதே உண்மை.
மிக
சமீபத்தில் கையும் களவுமாக பிடிபட்ட இளைஞர் விளையாட்டு துறை அமைச்சின் உயர் அதிகாரி, அவருக்கு வழங்கப்பட்ட பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளது மிக வருந்தத்தக்கது.
இந்த
விவகாரம் குறித்து பல தரப்புகள் தங்களது தொடர் அதிருப்திகளைப் பதிவு செய்து வருகின்றனர். விளையாட்டு துறைக்கும் விளையாட்டாளர்களுக்கும் தேவையான பல்வேறு முகாம்களும், பயிற்சிகளும் பல முறை பட்ஜெட் பற்றாக்குறையை காரணம் காட்டி செயல்படுத்த முடியாமல் போனதாகவும் அன்மையில் செய்திகள் வெளிவந்தன.
ஒரு
முழு அமைச்சைச் சேர்ந்த தனி ஒரு மனிதனின் சட்டைப்பைக்குள் 100 மில்லியன் ரிங்கிட் பதுக்கப்பட்டுள்ளது என்பது எளிதில் நம்பிவிட முடியாது என்ற போதிலும் இதுவே உண்மை.
ஊழல்
மற்றும் கையூட்டு நடவடிக்கைகள் தவறு என்று ஆங்காங்கே அறைக்கூவல் விடுத்து வரும் போதிலும் அமைச்சுகளில் இவை இன்னும் நடந்த வண்ணமாக இருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கவலையையும் உண்டாக்குகிறது.
ஒவ்வொரு
அமைச்சு, அரசாங்க சார்புடைய மற்றும் சார்பற்ற இயக்கங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் இவை அனைத்திலும் இத்தகைய சம்பவங்கள் இனியும் நடக்காமல் இருப்பதை அந்தந்த நிறுவனங்கள்தான் சுய சட்ட திட்டங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சரியான சட்ட திட்டங்கள்
வரையப்படுவது மட்டுமல்லாமல் அவற்றை ஊழியர்கள் முறையாக பின்பற்றுவதையும் நிறுவன அதிகாரிகள்
உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி ஒரு வேளை
குறிப்பிட்ட ஒருவர் விதிமுறைகளை மீறுவதோ அல்லது தவறிழைப்பதோ கண்டுபிடிக்கப்பட்டால்
தகுந்த நவடிக்கை எடுக்கப்பட்ட வேண்டும்.
இது மற்ற ஊழியர்களுக்கு
கட்டாயம் ஒரு பாடமாக அமையும் என்பது திண்ணம். வருங்காலத்தில்
இது பொன்ற தொழில் இட முறைக்கேடுகளைத் தவிர்க்க இத்தகைய சட்ட திட்டங்கள் அவசியம் உதவும்
என எதிர் பார்க்கலாம்.
Thursday, March 17, 2016
கிளாந்தான் மாநில புதிய ஊழல் தடுப்பு பிரிவின் இயக்குநராக டத்தோ மோ சம்சுடின் யூசோப் தேர்வு
கிளாந்தான் மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய இயக்குநராக டத்தோ மோ சம்சுடின் யூசோப் நேற்று காலை பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.
இம்மாநில முன்னாள் இயக்குநர் டத்தோ ஹஜி அப்துல் அஸிஸ் அபானுக்கு பதிலாக மோ சம்சுடின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மோ சம்சுடினின் புதிய பதவி ஏற்பு நேற்று காலை கிளாந்தான் மாநில ஊழல் தடுப்பு அலுவலகத்தில் நடைப்பெற்றது.
முன்னதாக மோ சம்சுடின் விலாயா பெர்செக்குத்துவான புத்ராஜயாவின் மாநில இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
புத்ராஜயாவின் புதிய இயக்குநராக அதுல் அஸிஸ் மாற்றம் கண்டுள்ளார்.
இதனிடையே கிளாந்தானில் தமது பிரியாவிடை உரையாற்றிய அப்துல் அஸிஸ், குறைந்த செலவில் அதிக தாக்கம் ஏற்படுத்தும் திட்டங்களை உழல் தடுப்பு ஆணையம் செயல்படுத்தி வந்ததாக குறிப்பிட்டார்.
இதுவரையில் கிளாந்தான் ஊழல் தடுப்பு ஆணையம், பெருநிறுவன நாணயதன்மை உறுதிமொழி (சி.ஐ.பி), மக்களுக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு வழங்குதல் போன்ற விஷயங்களுக்கு முக்கியத்தூவம் வழங்கி வருந்தாக குறிப்பிட்டார்.

ஊழல் அம்சங்கள் கண்டறியப்பட்டால் எம்.ஏ.சி.சி விசாரணை நடத்தும்
பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் சந்தேக விமர்சனங்கள் குறித்து புகார் பெறப்பட்டால் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி விசாரணை நடத்தும் என பினாங்கு மாநில எம்.ஏ.சி.சி இயக்குனர் டத்தோ சாமராஜூ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நேற்று பெரித்தா ஹாரியான் நாளிதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பில் தமது தரப்பு எந்த ஒரு புகாரையும் பெறவில்லை என சாமராஜூ கூறினார்.
புகார் பெறபட்ட பிறகு அதில் ஊழல் நடந்துள்ளதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டால் எம்.ஏ.சி.சி கட்டாயம் விசாரணை நடத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றார் அவர்.
இதனைத் தொடர்ந்து, இன்னும் உண்மை நிலவரம் தெரியவராமல் இருக்கும் ஒரு விஷயத்தில் அநாவசிய கருத்து கணிப்பை பதிவு செய்ய தம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Monday, March 14, 2016
ஊழியர்களின் நாணயத்தை செம்மைப்படுத்தும் சி.ஐ.பி
அரசாங்க துறைச் சார்ந்த நிறுவனங்கள், அரசு சார்பற்ற பெருநிறுவனங்கள், மற்றும் ஏஜென்ஸிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (எம்.ஏ.சி.சி) பெருநிறுவன நாணயத்தன்மை உறுதிமொழியை (சி.ஐ.பி) கையெழுத்திடுவதால் அந்தந்த நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் நேர்மை மற்றும் நாணயத்தன்மையை மேம்படுத்த முடியும் என்பது திண்ணம்.
இதுவரையில் சுமார் 850 நிறுவனங்கள் இந்த சி.ஐ.பி உறுதிமொழியை கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு தழுவிய அளவில் பல நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களின் நேர்மை தன்மையை சீரான நிலையில் வைத்துக் கொள்வதற்கு உரிய முயற்சிகளை எடுத்து வருவது இதன் மூலம் புலப்படுகிறது.
நேற்று மஜ்லிஸ் அமனா ரக்யாட் எனப்படும் மாரா மற்றும் அதன் 17 துணை நிறுவனங்களும் எம்.ஏ.சி.சி யுடன் சி.ஐ.பி உறுதி மொழியை கையெழுத்திட்டன.
எம்.ஏ.சி.சி யின் உயர் ஆணையனரான தான் ஶ்ரீ அபு காசிம் முகமது அவர்களின் முன்னிலையில் இந்த நிகழ்வு மிக சுமூகமாக கையெழுத்தானது.
இதனிடையே இந்த நிகழ்வில் முதன்மை உரை ஆற்றிய அபு காசிம் ஊழலை களைவதிலும், ஊழியர்களின் நாணயத்தன்மையை பாதுகாப்பதிலும் மாரா எடுத்துள்ள இந்த உன்னத முயற்சி பாராட்டத்தக்கது என வர்ணித்தார்.
இனியும் நாடு தழுவிய அளவில் அதிகமான நிறுவனங்கள் இந்த சி.ஐ.பி உறுதிமொழியை கையெழுத்திடும் என நம்பலாம்.

Subscribe to:
Posts (Atom)
http://www.selliyal.com/archives/125011
http://www.vanakkammalaysia.com/world/19-politics/844-100
http://www.vanakkammalaysia.com/world/19-politics/994-2016-03-26-07-22-07
http://www.vanakkammalaysia.com/2-uncategorised/949-100