அரசாங்க துறைச் சார்ந்த நிறுவனங்கள், அரசு சார்பற்ற பெருநிறுவனங்கள், மற்றும் ஏஜென்ஸிகள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் (எம்.ஏ.சி.சி) பெருநிறுவன நாணயத்தன்மை உறுதிமொழியை (சி.ஐ.பி) கையெழுத்திடுவதால் அந்தந்த நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் நேர்மை மற்றும் நாணயத்தன்மையை மேம்படுத்த முடியும் என்பது திண்ணம்.
இதுவரையில் சுமார் 850 நிறுவனங்கள் இந்த சி.ஐ.பி உறுதிமொழியை கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடு தழுவிய அளவில் பல நிறுவனங்கள் தத்தம் ஊழியர்களின் நேர்மை தன்மையை சீரான நிலையில் வைத்துக் கொள்வதற்கு உரிய முயற்சிகளை எடுத்து வருவது இதன் மூலம் புலப்படுகிறது.
நேற்று மஜ்லிஸ் அமனா ரக்யாட் எனப்படும் மாரா மற்றும் அதன் 17 துணை நிறுவனங்களும் எம்.ஏ.சி.சி யுடன் சி.ஐ.பி உறுதி மொழியை கையெழுத்திட்டன.
எம்.ஏ.சி.சி யின் உயர் ஆணையனரான தான் ஶ்ரீ அபு காசிம் முகமது அவர்களின் முன்னிலையில் இந்த நிகழ்வு மிக சுமூகமாக கையெழுத்தானது.
இதனிடையே இந்த நிகழ்வில் முதன்மை உரை ஆற்றிய அபு காசிம் ஊழலை களைவதிலும், ஊழியர்களின் நாணயத்தன்மையை பாதுகாப்பதிலும் மாரா எடுத்துள்ள இந்த உன்னத முயற்சி பாராட்டத்தக்கது என வர்ணித்தார்.
இனியும் நாடு தழுவிய அளவில் அதிகமான நிறுவனங்கள் இந்த சி.ஐ.பி உறுதிமொழியை கையெழுத்திடும் என நம்பலாம்.
No comments:
Post a Comment