Thursday, March 17, 2016

ஊழல் அம்சங்கள் கண்டறியப்பட்டால் எம்.ஏ.சி.சி விசாரணை நடத்தும்

பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் மீதான ஊழல் சந்தேக விமர்சனங்கள் குறித்து புகார் பெறப்பட்டால்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி விசாரணை நடத்தும் என பினாங்கு மாநில எம்.ஏ.சி.சி இயக்குனர்   டத்தோ சாமராஜூ மாணிக்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று பெரித்தா ஹாரியான் நாளிதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே இதுவரையில் இந்த விவகாரம் தொடர்பில் தமது தரப்பு எந்த ஒரு புகாரையும் பெறவில்லை என சாமராஜூ கூறினார்.

புகார் பெறபட்ட பிறகு அதில் ஊழல் நடந்துள்ளதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டால் எம்.ஏ.சி.சி கட்டாயம் விசாரணை நடத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்றார் அவர்.

இதனைத் தொடர்ந்து, இன்னும் உண்மை நிலவரம் தெரியவராமல் இருக்கும் ஒரு விஷயத்தில் அநாவசிய கருத்து கணிப்பை பதிவு செய்ய தம் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment