Wednesday, August 5, 2015

சட்ட துறை தலைவர் இனியும் மௌனம் காக்க தேவையில்லை!


என்ன தான் நடக்குது இந்த 1 எம்.டி.பி விவகாரத்துலே? நாட்டின் உயர் அந்தஸ்த்து கொண்ட தலைவரோட வங்கி கணக்குலே 260 கோடி வெள்ளி போடப்பட்டிருக்குன்னு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த 3 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலே சொல்லிட்டாங்கே….

ஆனால் அது 1 எம்.டி.பி பணம் இல்ல… தேர்தல் பிரச்சாரத்துக்காக நன்கொடையா வந்த பணம்ன்னு சொல்லியாச்சு…. ஆனா நன்கொடை கொடுத்தது யாருன்னு சொல்லல....

ஊழல் தடுப்பு ஆணையத்தோட அதிகாரம் எவ்வளவு தூரம் இருக்கோ அதுக்கு உட்பட்ட விசாரணையும் நடத்தப்பட்டாச்சு, வங்கி கணக்கில இருக்கிற பணத்தைப் பத்தியும் அது நன்கொடையா வந்ததுன்னும் தெரிவிச்சாச்சு….

இதுக்கு மேலே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டியது யாரு? ஏதோ என்னோட அறிவுக்கு எட்டினத நான் சொல்லிடறேன்…… 

ஒரு பணிக்குழு ஒன்னு அமைச்சாங்கலே, 1 எம்.டி.பி பற்றிய விசாரணை நடத்த…. அதுல முதன்மை வகிக்கிற ஒரு அமைப்பு தான் கண்டிப்பா இதுக்கு பொறுப்பேற்கனும்.

நம்ம நாட்டில சட்டம் தொடர்பான பிரச்சனைகள் வரும் போதும், இல்ல எதேனும் பிரச்சனைகள் உச்ச கட்டத்தை எட்டும் போதும், சட்ட துறை தலைவரையும் அவர் சார்ந்த மற்ற சட்ட நிபுணர்களையும் அனுகுறது தானே இத்தனை நாள் வழக்கமா இருந்து வந்துச்சு… 

அப்போ இதுவும் கண்டிப்பா அவரோட கவனத்துக்கு கொண்டு செல்லப்படுறது தானே நியாயம்….

அந்த நிதியை நன்கொடையா கொடுத்த தர்ம பிரபு அல்லது பிரபுக்கள் யாருன்னு கண்டுபிடிக்கிறதுல்ல இருந்து, எதுக்காக இவ்வளோ பெரிய தொகை நன்கொடையா கொடுக்கப்பட்டது அப்படின்ற வரைக்கும் இனி சட்ட துறை தலைவர் தான் விசாரிக்கனும்.

இதுக்கு முன்னl, 1 எம்.டி.பி கீழே இருந்து வந்த எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல் மேலே உள்ள விசாரணையும் எம்.ஏ.சி.சி இன்னும் முழுசா முடிக்கல. 

அந்த நாப்பது கோடி வெள்ளி தொடர்பான விசாரணையும் இன்னும் நடந்துகிட்டு தானே இருக்கு….

இப்படி இருக்கையிலே ஆத்துல ஒரு காலுன்னும், சேத்துல ஒரு காலுன்னும் எப்படிதான் இந்த எம்.ஏ.சி.சி யினாலே வைக்க முடியும்?

இன்னோரு விஷயத்தையும் நான் சொல்லிடறேன்......

இந்த 260 கோடி வெள்ளி முழுசா நன்கொடை பணம் தான் என்கிற விஷயத்தையும் சட்ட துறை தலைவரிடத்தில எம்.ஏ.சி.சி சொல்லிட்டாங்களாம்!

என்னோட வேலையை நான் பக்குவமா முடிச்சிட்டேன், இனி விசாரணை உங்க கையில என்கிற மாதிரி எம்.ஏ.சி.சி தன்னோட விசாரணை தொடர்பான அறிக்கையையயும் வெளியிட்டுடாங்க….

அப்புறம் என்னங்க? சட்ட துறை தலைவர் தன்னோட பொறுப்பை ஆரம்பிச்சிற வேண்டியது தானே…..

எவ்வளவுக்கு எவ்வளவு விசாரணை விரசலா முடியுதோ; அவ்வளவும் எல்லாருக்கும் நல்லச் செய்தி தானேப்பா….


அப்புறம் எதுக்கு விசாரணையைத் தள்ளிப் போட்டுகிட்டு…. சட்டு புட்டுன்னு ஆரம்பிங்கப்பா….

Tuesday, August 4, 2015

சிந்தித்து செயல்படுவோம்



எதையுமே சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பது கேட்டு கேட்டு புளித்துப் போன ஒன்றுதான்.

இது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் பழைய மொழி என்ற போதிலும் பல விஷயங்களில் நாம் சிந்தித்து அதன் பின்னர் செயல்படுவதை மறந்து விடுகின்றோம் என்பது தான் உண்மை.

குறிப்பாக இப்பொது பெரும் பிரச்சனையாக  இருந்து வருவது  1எம்.டி,பி  விவகராத்தில் பெரும்பாலானோர் சிந்திக்காமல் வாய்க்கு வந்ததையெல்லாம்  பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் பக்கம் பக்கமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக 1 எம்.டி.பி விவகாரத்தில் தகவல்கள் கசிந்தது தொடர்பில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சில அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.

இது விசாரணையின் ஒரு பகுதியே.

இப்படிச் செய்வதன் மூலம் 1 எம்.டிபி விவகாரத்தையன்று, தகவல் கசிந்ததற்கு மட்டும் அதிக முக்கியத்தூவம் வழங்குவதாக சில தரப்பினர் எண்ணுகின்றனர்.

மேலும் சிலர் இது அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் செயல் எனவும் கூறுகின்றனர்.

இது முற்றிலும் ஒரு தவறான கருத்து.

1 எம்.டி.பி விவகாரம் பிரதமரை மட்டுமின்றி நாட்டின் கௌரவத்தையும்  ஒட்டு மொத்தமாக பிரதிபலிக்கும் ஒரு விஷயம்.

உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் பார்வையும் அவ்வப்போது இந்த விவகாரத்தின் பக்கம் இருப்பது உண்மை.

அப்படி இருக்கையில் இது தொடர்பான  விசாராணைய நிச்சயம் சோடைப் போகாது.

இருப்பினும் விசாரணை தரப்புகள் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் 1 எம்.டி.பி சம்பந்தப்பட்ட விசாரணை கூடிய விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இந்த விசாரணையின் முடிவில் தான் நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் பெற முடிவும்.

அதே நேரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்புகளுக்கும் மக்கள்  சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதும் மிக மிக  அவசியம்.

ஓன்றுபட்டு செயல்பட்டால் விரைவில் சுமூகமான தீர்வைக் காண இயலும்.




                        



இனி ஒரு திறந்த விசாரணை...... விரைவில்!

பிரதமரின் வங்கி கணக்கில் இருக்கும் 260 கோடி வெள்ளி 1 எம்.டி.பி பணம் அல்ல மாறாக அது தேர்தலுக்கா நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில் அறிவித்திருந்தது.

இதனை அடுத்து பல சாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.
இது அடிப்படையற்ற மற்றும் நம்பகத்தன்மையற்ற தகவல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இனியும் இது போன்ற அறிக்கைகள் மக்களுக்கு விசாரணையின் பால் நாட்டத்தை ஏற்படுத்தாது என்பது தற்போது நிலவி வரும் பரவலான கருத்து.

அடிப்படையில் இந்த பத்திரிக்கை செய்தியின் மூலம் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்பு பணிக்குழுவில் எம்.ஏ.சி.சி யின் பங்கு எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷினல் நிறுவனத்தை விசாரிப்பது மற்றும் அந்த நிறுவனத்தில் ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அதனைச் சட்டத்தின் முன் கொண்டு நிறுத்துவதே ஆகும்.

மாறாக சிறப்பு பணிக்குழுவில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு தனிபட்ட அமைப்பிற்கும் விசாரணையில் தனித்தனி பங்கு இருந்து வருகிறது.

1.எம்.டிபி யை முழுமையாக விசாரிக்கும் பணியும் பொறுப்பும் அரச மலேசிய போலீஸ் படையிடமும், மற்றும் நிதி முறைகேட்டினை விசாரிக்கும் பொறுப்பு தேசிய வங்கியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அப்படி அது தேர்தலுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட பணமாகவே இருந்த போதிலும், அதனை வழங்கியவர் யார்? எதற்காக அவ்வளவு பெரிய தொகை வழங்கப்பட்டது என்ற கேள்விகளும் எழும்.

இந்த அனைத்துக் குற்றச் சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்கும் அதிகாரம் எம்.ஏ.சி.சி க்கு இல்லை.

அந்த அதிகாரங்கள் விசாரணையில் சம்பந்தபட்ட மற்ற மற்ற அமைப்புகளிம் உள்ளது.

அனைத்து முறைகேட்டையும் விசாரிக்கும் அளவிற்கு எம்.ஏ.சி.சி யின் அதிகாரம் விசாலமாக இல்லை என்பது தான் உண்மை.

இருப்பினும் சம்பந்தபட்ட அமைப்புகள் முழு மூச்சுடன் இந்த விசாரணையைத் தொடர்வர் என எதிர்ப்பார்போம்.


நேற்றைய எம்.ஏ.சி.சியின் பத்திரிக்கைச் செய்தி இனி பல திறந்த விசாரணைகளுக்கு வித்திடும் என நம்புவோம்.