Tuesday, August 4, 2015

சிந்தித்து செயல்படுவோம்



எதையுமே சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என்பது கேட்டு கேட்டு புளித்துப் போன ஒன்றுதான்.

இது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் பழைய மொழி என்ற போதிலும் பல விஷயங்களில் நாம் சிந்தித்து அதன் பின்னர் செயல்படுவதை மறந்து விடுகின்றோம் என்பது தான் உண்மை.

குறிப்பாக இப்பொது பெரும் பிரச்சனையாக  இருந்து வருவது  1எம்.டி,பி  விவகராத்தில் பெரும்பாலானோர் சிந்திக்காமல் வாய்க்கு வந்ததையெல்லாம்  பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சியிலும் பக்கம் பக்கமாக கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக 1 எம்.டி.பி விவகாரத்தில் தகவல்கள் கசிந்தது தொடர்பில்  மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சில அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.

இது விசாரணையின் ஒரு பகுதியே.

இப்படிச் செய்வதன் மூலம் 1 எம்.டிபி விவகாரத்தையன்று, தகவல் கசிந்ததற்கு மட்டும் அதிக முக்கியத்தூவம் வழங்குவதாக சில தரப்பினர் எண்ணுகின்றனர்.

மேலும் சிலர் இது அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் செயல் எனவும் கூறுகின்றனர்.

இது முற்றிலும் ஒரு தவறான கருத்து.

1 எம்.டி.பி விவகாரம் பிரதமரை மட்டுமின்றி நாட்டின் கௌரவத்தையும்  ஒட்டு மொத்தமாக பிரதிபலிக்கும் ஒரு விஷயம்.

உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் பார்வையும் அவ்வப்போது இந்த விவகாரத்தின் பக்கம் இருப்பது உண்மை.

அப்படி இருக்கையில் இது தொடர்பான  விசாராணைய நிச்சயம் சோடைப் போகாது.

இருப்பினும் விசாரணை தரப்புகள் மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் 1 எம்.டி.பி சம்பந்தப்பட்ட விசாரணை கூடிய விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.

இந்த விசாரணையின் முடிவில் தான் நாட்டு மக்களின் நம்பிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகள் பெற முடிவும்.

அதே நேரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கும் மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ள மற்ற அமைப்புகளுக்கும் மக்கள்  சிறந்த ஒத்துழைப்பை வழங்குவதும் மிக மிக  அவசியம்.

ஓன்றுபட்டு செயல்பட்டால் விரைவில் சுமூகமான தீர்வைக் காண இயலும்.




                        



No comments:

Post a Comment