பிரதமரின் வங்கி
கணக்கில் இருக்கும் 260 கோடி வெள்ளி 1 எம்.டி.பி பணம் அல்ல மாறாக அது தேர்தலுக்கா நன்கொடையாக வழங்கப்பட்ட பணம் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்று வெளியிட்ட பத்திரிக்கை
செய்தியில் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து பல
சாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக உள்ளன.
இது அடிப்படையற்ற
மற்றும் நம்பகத்தன்மையற்ற தகவல் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இனியும் இது போன்ற
அறிக்கைகள் மக்களுக்கு விசாரணையின் பால் நாட்டத்தை ஏற்படுத்தாது என்பது தற்போது நிலவி
வரும் பரவலான கருத்து.
அடிப்படையில் இந்த
பத்திரிக்கை செய்தியின் மூலம் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
சிறப்பு பணிக்குழுவில்
எம்.ஏ.சி.சி யின் பங்கு எஸ்.ஆர்.சி இன்டெர்நேஷினல் நிறுவனத்தை விசாரிப்பது மற்றும்
அந்த நிறுவனத்தில் ஊழல் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அதனைச் சட்டத்தின் முன் கொண்டு
நிறுத்துவதே ஆகும்.
மாறாக சிறப்பு
பணிக்குழுவில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு தனிபட்ட அமைப்பிற்கும் விசாரணையில் தனித்தனி
பங்கு இருந்து வருகிறது.
1.எம்.டிபி யை
முழுமையாக விசாரிக்கும் பணியும் பொறுப்பும் அரச மலேசிய போலீஸ் படையிடமும், மற்றும்
நிதி முறைகேட்டினை விசாரிக்கும் பொறுப்பு தேசிய வங்கியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
அப்படி அது தேர்தலுக்காக நன்கொடையாக வழங்கப்பட்ட பணமாகவே இருந்த போதிலும், அதனை வழங்கியவர் யார்? எதற்காக அவ்வளவு
பெரிய தொகை வழங்கப்பட்டது என்ற கேள்விகளும் எழும்.
இந்த அனைத்துக்
குற்றச் சாட்டுகளையும் முழுமையாக விசாரிக்கும் அதிகாரம் எம்.ஏ.சி.சி க்கு இல்லை.
அந்த அதிகாரங்கள்
விசாரணையில் சம்பந்தபட்ட மற்ற மற்ற அமைப்புகளிம் உள்ளது.
அனைத்து முறைகேட்டையும்
விசாரிக்கும் அளவிற்கு எம்.ஏ.சி.சி யின் அதிகாரம் விசாலமாக இல்லை என்பது தான் உண்மை.
இருப்பினும் சம்பந்தபட்ட
அமைப்புகள் முழு மூச்சுடன் இந்த விசாரணையைத் தொடர்வர் என எதிர்ப்பார்போம்.
நேற்றைய எம்.ஏ.சி.சியின்
பத்திரிக்கைச் செய்தி இனி பல திறந்த விசாரணைகளுக்கு வித்திடும் என நம்புவோம்.
No comments:
Post a Comment