Thursday, December 24, 2015

மலேசியர்களில் 70 விழுக்காட்டினருக்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு உண்டு



மலேசியர்களில் மொத்தம் 83 விழுக்காட்டினர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் குறித்து தெரிந்து வைத்திருக்கின்றனர். அவர்களில் 70 விழுக்காட்டினர் இந்த ஆணையம் குறித்த உண்மையான விழிப்புணர்வையும் பெற்றிருக்கின்றனர். ஆய்வு ஒன்றின் மூலம் இந்த கணக்கெடுப்பு பெறப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு சிறப்பு குழுவின் உறுப்பினர் முனைவர் டாகடர் இஸ்மாயில் சுவால்மான் தெரிவித்தார்

முன்னதாக எம்..சி.சி அறிமுகப்படுத்தியிருக்கும் ஆன்லைன் வானொலி ஒன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டு மக்கள் தொகையில் சுமார் 83 விழுக்காட்டினர் எம்..சி.சி தொடர்பாக அறிந்து வைத்திருப்பது இந்த ஆணையத்திற்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி என்று அவர் புகழாரம் சூட்டினார்

ஊழல் மற்றும் அதனை களைவதில் எம்..சி.சி போன்ற அமைப்புகளின் பங்கு குறித்து மக்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என கூறிய அவர், இது தொடர்பான விளக்கங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தகவல் ஊடகங்களின் அறிய கடப்பாடு என்றார்

நாடளாவியச் செய்திகள் மற்றும் உலகத்தர தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் அதே வேளையில் இது போன்ற விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களையும் மக்களிடையே எடுத்து செல்வது தகவல் சாதனங்களின் பொறுப்பு என்றார் இஸ்மாயில் சுவால்மான்

ஊழலை களையும் பங்கும் பொறுப்பும் முழுமையாக எம்..சி.சி யை மட்டுமே சார்ந்தது எனும் தவறான கண்ணோட்டத்தை முதலில் நாம் கைவிட வேண்டும்

மாறாக நாட்டில் கையூட்டு மற்றும் ஊழல் குறித்த பிரச்சனைகள் தலைத் தூக்கும் பொழுது, ஒவ்வொரு குடிமகனும் அதனை தனது சொந்த பிரச்சனையாக கருதி களைய முற்பட வேண்டும் என அவர் கூறினார்

புறநகர் பகுதிகளில் வாழும் மக்க்ளுக்கு அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளும், கிராம தலைவர்களும் ஊழல் குறித்த விழிப்புணர்வு விளக்கங்களை வழங்க வேண்டும்

இது மட்டுமின்றி ஊழல் போன்ற கடுங்குற்றங்கள் குறித்த தெளிவு ஆரம்ப பள்ளி முதல் கொண்டே மாணவர்களுக்கும் எடுத்துரைக்கப்பட வேண்டும், என்பதும் அவரின் கருத்து.  

எல்லா துறைகளிலும் அவ்வப்போது நடந்து வரும் ஊழல் குற்றங்களை முற்றாக களை எடுக்கும் நடவடிக்கையில் முழுமையாக ஈடுபட்டுள்ள எம்..சி.சி, மக்கள் மத்தியில் ஊழல் குறித்த விழிப்புணர்வுகளை பதிவு செய்யும் திட்டங்களையும் நடத்திக் கொண்டு வருகிறது

மக்களுடன் ஒன்றிணைந்து, ஊழல் கொடியது என்பது தொடர்பான எண்ணங்களை அவர்கள் மனத்தில் விதைப்பதையும் எம்..சி.சி யின் சமுதாய கல்வி பிரிவு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்

இதனிடையே தற்போது சமூக உடகங்களின் தாக்கம் மக்களிடையே அதிகம் உள்ளதால், அவற்றில் எம்..சி.சி தொடர்பான ஆதாரமில்லதா மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருவதையும் அவர் மறுக்கவில்லை

இருப்பினும் இவை அனைத்தும் வெறும் கணிப்புகள் அடிப்படையில் முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், ஆதலால் இத்தகைய சாடல்கள் அதிக நாட்கள் எடுபடுவதில்லை என்றார் அவர்

மக்களிடையே இணைந்து செயல்படுவதற்கு எப்போதும் அதிகபடியான முயற்சிகளை எம்..சி.சி மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், அனைத்துல ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எம்..சி.சி.யின் ஆன்லைன் வானொலி மேலுமொரு சிறப்பான முயற்சி என பாராட்டினார்.   
 
இந்த வானொலியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் மூலம் ஊழல் தொடர்பான மேலும் அதிகமான தகவல்களை மக்கள் நிச்சயம் பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது இளம் தலைமுறையினரை அனுகும் ஒரு வித்தியாசமான அனுகுமுறை எனவும் அவர் வர்ணித்தார்

ஊழல் குறித்த விழிப்புணர்வு நோக்கத்தோடு மக்களை ஒருமைப்படுத்தும் இத்தகைய முயற்சிகள் இத்தோடு முடங்கி விடாமல் இருப்பதை உறுதி செய்வது மிக மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்

இந்த முயற்சிகள் கால வறையரை இன்றி எல்லா வேளைகளிலும் தொடரப்பட்டால் மக்களின் தளராத நம்பிக்கையை எம்..சி.சி கட்டாயம் பெற முடியும் என இஸ்மாயில் சுவால்மான் கூறினார்.