கடந்த ஓராண்டு காலம் முழு பயிற்சி காலத்தை முடித்த 109 அதிகாரிகள் நேற்று அவர்களின் பயிற்சிக்கான நற்சான்றிதழ் வழங்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள எம்.ஏ.சி.சி யின் அலுவலகங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அவர்களுள் எழுவர் இந்திய அதிகாரிகள் ஆவர்.
முன்னதாக பயிற்சி காலத்தை முடித்துக் கொண்ட அவர்கள் ஜொகூர் மாநில ஊழல் ஒழிப்பு ஆணைய வளாகத்தில் நடைப்பெற்ற அணிவகுப்பில் கலந்து கொண்ட பின்னர் தத்தம் நற்சான்றிதழ்களைப் பெற்று கொண்டனர்.
மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது பயிற்சியை முடித்த அதிகாரிகளுக்குச் சான்றிதழ்களை எடுத்து வழங்கினார்.
பயிற்சியை முடித்தவர்களில் 15 பேர் கணக்கியல் துறையில் பயின்றவர்களாக இந்த ஆணையத்தின் நிர்வாக துறையில் சேவை ஆற்றுவர்.
சான்றிதழ்களைப் பெற்று கொண்ட இந்திய அதிகாரிகள் ஊழல் ஒழிப்பு துறையில் சேவையாற்ற தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமை படுவதாக கூறினர்.
இதனிடையே வெற்றிகரமாக பயிற்சியை முடித்துக் கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் டான் ஶ்ரீ அபு காசிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
No comments:
Post a Comment