தோற்றுவிக்கப்பட்டு முதல்
பத்து ஆண்டுகளில் மலேசிய ஊழல் தடுப்பு கல்லூரி (மாகா) பல்வேறு வழிகளில் நாட்டுக்கு நற்பெயர் ஈட்டித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பக்
காலக்கட்டங்களில்
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அமைக்கப்படுவதற்கு முன்னர், மாகா ஊழல் தடுப்பு அமைப்பின் ஒரு சிறிய பிரிவாக மட்டுமே இருந்து வந்தது.
2003 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைப்பெற்ற நான்காவது ஆசிய பசிபிக் வட்டார ஊழல் தடுப்பு நடவடிக்கைகளுக்கான செயலவைக் கூட்டத்தில் அப்போதைய பிரதமர் டத்தோ ஶ்ரீ அப்துல்லா அஹ்மாட் படாவி எம்.ஏ.சி.சி யை அறிமுகபடுத்தினார்.
பின்னர்
2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செயல்பட தொடங்கிய இப்பயிற்சி கல்லூரி இவ்வாண்டோடு பத்தாண்டு நிறைவை அடைந்தது.
பொதுவாக
உலக நாடுகளில் ஊழல் தடுப்பு பிரிவில் இது போன்று தனித்து ஒரு ஊழல் தடுப்பு கல்லூரி செயல்படுவது மிக குறைவு என்றே சொல்லலாம்.
குறிப்பாக எஸ்.பி.ஆர்.எம்
அதிகாரிகளுக்குத் தேவைப்படும் அடிப்படை பயிற்சிகள் மட்டுமின்றி மலேசிய அரசாங்க மற்றும் தனியார் துறைகளைச் சார்ந்த
அதிகாரிகளுக்கும் அவர்களுக்கு தேவையான பயிற்சிகளைத் தயாரித்து வழங்குகிறது.
அதுமட்டுமின்றி
சில உலக நாடுகளும் மாகா-வின் பயிற்சி திட்டங்களில் பங்கு பெற்று பயன் அடைந்தும் உள்ளன.
சில சமயங்களில்
மாகா-வின் அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு சென்று அங்குள்ள பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்குப்
பயிற்சி வழங்குவதும் உண்டு.
இப்படி பல பிரிவுகளைச்
சேர்ந்த வெவ்வேறு துறைகளில் உள்ள அதிகாரிகளுக்கு மாகா-வின் பயிற்சிகள் பல வகையிலும்
உதவுயுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment