Sunday, December 20, 2015

எஸ்.பி.ஆர்.எம் - தாய்லாந்து ஊழல் தடுப்பு அமைப்புடன் ஒத்துழைப்பு

மனித கடத்தல் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில்  கிளாந்தான்  ஊழல் தடுப்பு ஆணையம் விரைவில் தாய்லாந்து ஊழல் தடுப்பு அமைப்பான (ஏன்.ஏ.சி.சி) - யுடன்  இணைந்து ஒத்துழைப்பு நடத்த விருப்பதாக அதன் இயக்குனர் டத்தோ அப்துல் அஸிஸ் அபான் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் நராத்திவாட் பகுதி என்.ஏ.சி.சி யுடன்   இந்த இரு வழி ஒத்துழைப்பு குறித்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

தொடர்ந்து எதிர்வரும் ஜனவரி மாதம் இதன் தொடர் பேச்சு வார்த்தைக்காக தாம்  மீண்டும் தாய்லாந்து செல்லவிருப்பதாக கூறிய அவர், தாய்லாந்து தரப்பு இந்த ஒத்துழைப்புக்கு இணக்கம் தெரிவித்தால், பல நல்ல  விளைவுகளை எதிர்ப்பார்க்கலாம் என்றார்.

மனித கடத்தல் நடவடிக்கையைக் குறைப்பதற்கும், தொடர்ந்து வரும் காலங்களில் இதனை துடைத்தொழிப்பதற்கும் இத்தகைய இரு வழி ஒத்துழைப்புகள் மிக அவசியம் என, அப்துல் அஸிஸ் சொன்னார்.

2015 ஆம் ஆண்டுக்கான  கணக்கெடுப்பின் படி, பதிவு செய்யப்பட்ட மொத்த 35 சம்பவங்களில் 14 விழுக்காட்டு சம்பவங்கள் அரிசி, மற்ற பொருட்கள் மற்றும் மனித கடத்தல் குறித்தவை ஆகும்.

இத்தகைய குற்றங்களை களைவதில் தமது தரப்பு தகுந்த பாண்டித்தூவம் பெற்றிருக்கும் போதிலும். அதனை சரிவர முடிக்க இயலாமல் போவதற்கு பல இடையூறுகள் இருந்து வருவதாகவும் அவர் சொன்னார்.

தேவைப்படும் தகவல்கள் உடனடியாக கிடைக்கபெறாமல் போவது, சாட்சிகளின் மனதில் தோன்றும் பய உணர்வு, பாதுகாப்பு அம்சத்தைக் கருத்தில் கொண்டு, அநாவசிய அச்சம் காரணமாக சாட்சிகள் நீதிமன்றத்தில் சாட்சி கூற மறுத்தல் போன்றவை, தமது தரப்பு எதிர்நோக்கும் சவால்கள் என்றார் அவர்.

இதனிடையே, நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஊழல் நடவடிக்கைகளைக் களையும் வண்ணம் பல்வேறு அமலாக்க தரப்பினருடன் நடத்தப்பட்டுவரும் இணை முயற்சிகள் சீராக நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.






No comments:

Post a Comment