மக்களுடன் தொடர்ந்து
தனது நிலையான தொடர்பை மேம்படுத்திக் கொள்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி
பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது அனைவரும்
அறிந்ததே.
அந்த வகையில் மக்களை
சென்றடைவதில் அவ்வாணையத்தின் புதிய முயற்சியாக ஆன்லைன் வானொலி ஒன்று சமீபத்தில் தொடக்கம்
கண்டுள்ளது.
கடந்த 9 டிசம்பர்
அன்று அனைத்துலக ஊழல் எதிர்ப்பு தினத்தை அனுசரித்ததின் ஒரு அங்கமாக இந்த ஆன்லைன் வானொலி
அறிமுகம் செய்யப்பட்டது.
மக்களுடன் தொடர்பு
கொள்ள எளிய வழியை ஏற்படுத்திக் கொடுக்கும் அதே வேளையில் எம்.ஏ.சி.சி மீது பொது மக்கள்
கொண்டுள்ள நம்பிக்கையை அதிகரிக்கவும் இந்த புதிய அனுகுமுறை நிச்சயம் வழி வகுக்கும்
என எம்.ஏ.சி.சி தடுப்பு பிரிவின், துணை உயர் ஆணையர் டத்தோ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.
எம்.ஏ.சி.சி யின்
உடனடி நிலவரங்கள், அந்த ஆணையம் குறித்த தகவல்கள் மற்றும் உயர் ஆணையர், துணை உயர் ஆணையர்கள்,
இயக்குனர்கள், மாநில இயக்குனர்கள் போன்றோரின் சந்திப்புகளும் இந்த ஆன்லைன் வானொலி மூலம்
இடம் பெறவிருக்கிறது.
இதனிடையே அவ்வப்போது
ஊழல் குறித்த விழிப்புணர்வுகளும், தகவல்களும் இவ்வானொலியின் வாயிலாக மக்களுடன் பரிமாறிக்
கொள்ளப்படும்.
No comments:
Post a Comment