இளமையிற்
கல்வி சிலைமேல் எழுத்து என்பது பண்டைய அறிய மொழிகளுள் ஒன்று. இளமையில் எண்ணம், சிந்தை மற்றும் புத்தி ஆகியன தெளிந்த நீரோடைப் போல இருக்கும்.
இந்த
இளையப் பருவத்தில் கற்று தேர வேண்டிய அனைத்து நல்ல விஷயங்களையும் தாமதிக்காமல் கற்று விட வேண்டும். எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும் இந்த பருவத்தில் அதிகமாக இருக்கும். இந்த வயதில் கற்கும் கல்வி சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்து போல் அழியாது மனதில் பதிந்து இருக்கும்.
ஊழலைக்
களைவதில் இளையோருக்கு தகுந்த பாடத்தைப் போதிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) மேற்கொண்டிருக்கும் புதிய முயற்சியும் இப்பழமொழிக்கு ஏற்ப அமைந்திருக்கிறது.
ஆறாம்
ஆண்டு மாணவர்களின் நன்னெறி மற்றும் இஸ்லாமிய பாட புத்தகத்தில் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து இணைத்திருப்பது பாரட்டத்தக்க ஒரு செயல்.
இப்புதிய
பாடத்திட்டம் இந்த ஆண்டு முதல் கொண்டு அமலுக்கு வரவிருக்கிறது.
இந்த திட்டம் மாணவர்களுக்கு பல வகையில் நன்மையை புகட்ட தவறாது என, எம்.ஏ.சி.சி யின் ஊழல் தடுப்பு பிரிவு துணை ஆணையர் டத்தோ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.
குறிப்பாக
இந்த ஆண்டு ஆறாம் ஆண்டு பாட புத்தகத்தில், ஊழல் என்பதன் விளக்கம்,
ஊழல்களின் வகைகள், ஊழலுக்கான காரணங்கள், அவற்றால் ஏற்படும் விளைவுகள், ஆவற்றுகுறிய தண்டனைகள் ஆகியன குறித்து விவரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே,
பாட புத்தகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் ஊழல் குறித்த தகவல்கள் ஒட்டி கற்பிப்பது தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அவர் சொன்னார்.
இத்தகைய நல்ல முயற்சிகள்
நிச்சயம் ஆரோக்கியமான சிந்தனைக் கொண்ட வளமான எதிர்கால சந்ததியினரை உறுவாக்கும் என்பது
திண்ணம்.
No comments:
Post a Comment