Thursday, November 19, 2015

ஊழலை ஒழிக்க சமயமும் நல்வழி வகுக்கும்

மதங்கள் மனிதனுக்கு தவறான விஷயங்களையும் கருத்துக்களையும் எப்போதுமே போதிப்பதில்லை. பொய் சொல்லுதல், திருடுதல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுதல், இவை எதையுமே உலகின் எந்த ஒரு மதமும் ஆதரிப்பதில்லை.
சில நேரங்களில் நல்ல விஷயங்கள் புகட்டபடுவதற்கு மதம், சமயம் போன்றவை ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இஸ்லாத்தும் ஊழல் குற்ற விவகாரங்களும் எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டது.
இஸ்லாமிய ரீதியில் ஊழல் குற்றங்கள் குறித்த விளக்கங்களும், விழிப்புணர்வும் அளிக்கும் வகையில் அந்த புத்தக வெளியீடு அமைந்திருந்தது.
ஊழல் குறித்த விழிப்புணர்வை விளக்கக்கூடிய நபி முகமது மற்றும் அவரது நண்பர்களின் கதையை பகிர்ந்து கொள்ளும் அதே வேளையில் மலேசியாவில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் பரிணாம உருமாற்ற வளர்ச்சியையும் அந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது.
இதனிடையே இந்த புத்தக வெளியிடு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மற்றுமொரு தடுப்பு நடவடிக்கையாக அமையும் என அதன் துணை உயர் ஆணையர் டத்தோ ஶ்ரீ முஸ்தாபார் அலி தெரிவித்தார்.   
எல்லா மதத்திலும் லஞ்சம் பெறுவதும், கொடுப்பதும் குற்றமாகவே கருதப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் பலன் எதிர்ப்பார்த்து செய்யக்கூடாது என்பது பெரியோரின் வாக்கு.
இருப்பினும் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் தத்தம் கடமையையை செய்வதற்கே லஞ்சம் பெரும் பங்காற்றுகிறது. பணமோ, பொருளோ அவரவர் தேவைக்கேற்றவாறு வழங்கப்பட்ட பிறகுதான் பலர் தங்களது வேலையைச் செய்யவே ஆரம்பிக்கின்றனர்.
மேலும் பலர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கும் லஞ்சம் வழிவகுக்கிறது. பதவியில் மற்றும் குறிப்பிட்ட அதிகாரத்தில் இருக்கும் சிலர் பதவியை தவறாக கையாளுவதற்கு கோரும் வெகுமதி லஞ்சம்.
இந்த நெறியற்ற கொள்கை  நிச்சயம் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு சமயம் வாயிலாகாவும் கட்டாயம் வழியுள்ளது என்பது பெரும் உண்மை. 


No comments:

Post a Comment