Thursday, November 19, 2015

ஊழலை களைவதில் அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் ஈடுபாடு அவசியம்

ஊழல் ஆரோக்கியமற்ற சமுதாயத்தின் அடையாளம். 

இது ஒரு நாட்டின் ஒட்டுமொத்த  வளர்ச்சியை முற்றாக அழிக்க கூடிய சக்தி படைத்தது. 

சின்ன சின்ன தவறுகளை மூடி மறைக்கவும், தனிபட்ட ஒருவருக்கோ அல்லது ஒரு நிறுவனத்திற்கோ சாதகாமன செயல்களைச் செய்யவும், அதிகாரத்தில் இருப்பவருக்கு   வழங்கப்படும் அரோக்கியமற்ற சன்மானம் இந்த ஊழல்.

இதனைக் களைவது அவசியம். ஆனால் அதனிலும் மிக முக்கியம் இந்த ஊழல் குறித்த விழிப்புணர்வை வழங்குவது. சமுதாயத்தில் பாராபட்சம் இன்றி அனைவருக்கும் இந்த ஊழல் கடுங்குற்றம் என புகட்டப்பட வேண்டும். 
 

இது சமுதாய கடப்பாடு நிறைந்த ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்பு மற்றும் கடமை. இதனை தனி மனித கடமையாக கருதி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இருப்பினும் இத்தகைய விழிப்புணர்வு திட்டங்களை பெரிய அளவில் சமுதாய விளிம்புகளுக்கு கொண்டுச் செல்வதற்கு அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களின் உதவி மிக அவசியம் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் அனைத்துலக தொடர்பு குழு  தலைவர் திரு கருணாநிதி சுப்பையா தெரிவித்தார். 

பல சமயங்களில் எம்.ஏ.சி.சி யின் சமுதாய கல்வி பிரிவு  நேரடியாக சென்று மக்களைச் சந்தித்து அவர்களுக்கு வேண்டிய தகவல்களை வழங்கி வருகிறது.  
இருப்பினும் மக்களுக்கு குறிப்பாக இந்திய சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு சார்பற்ற இந்திய இயக்கங்கள் அவ்வப்போது நடத்தும் நிகழ்ச்சிகளில் ஊழல் தடுப்பு குறித்த விஷயங்களையும் இணைத்துக் கொள்வது முக்கியம் என கருணாநிதி வலியுறுத்தினார். 

இவ்வாறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய விரும்பும் இந்திய இயக்கங்களும் மற்றும் பல பொது இயக்கங்களும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர். 

 
  

No comments:

Post a Comment