வெற்றிகரமாக
நடந்து முடிந்த 16-வது அனைத்துலக ஊழல் தடுப்பு மாநாட்டில் ஊழலை எதிர்த்து எட்டு உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்டன.
மாநாட்டில்
கலந்து கொண்ட சுமார் 130 நாட்டு பிரதிநிதிகளின் ஒரு சேர்ந்த உறுதிமொழியாக நிகழ்ச்சியின் முடிவு விழாவில் இது அறிவிக்கப்பட்டது.
அவை
எட்டில் முதலாவதாக ஊழலை தடுக்கும் வன்ணம் பல வித நடவடிக்கைகளை எடுப்பதோடு, ஊழல் பெற்றவர் அதற்கான தண்டனையை தவிர்த்து, பெற்ற ஊழல் தொகையை முற்றிலும் மக்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும்.
அடுத்து, பெற்ற தொகையையோ அல்லது அதன் மூலம் கிடைக்கப்பெற்ற சொத்துக்களையோ மீட்பதன் மூலம் மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க முடிவதோடு, ஊழல் தொடர்பாக ஏற்பட்ட சேதத்தையும் ஈடு செய்ய முடியும்.
ஊழல்
மூலம் பெறப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்வது அவசியம், ஏனெனில் இது எந்த விதத்திலும் ஊழலில் சம்பந்த்தப்பட்ட நபர் சட்டத்தை மீறி அந்த சொத்துக்களை அனுபவிப்பதில் இருந்து தடுக்கும்.
அனைத்துலக கடப்பிதழ்
மற்றும் விசா முதலியவற்றை பயன்படுத்தி ஊழலில் சம்பந்தப்பட்டவர் சட்டத்தின் பிடியிலிருந்து
தப்பித்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
லஞ்சம் தொடர்பான
குற்றங்கள் அனைத்துலக அளவில் கடுங்குற்றங்களாக அறிவிக்கப்படும் அதே வேளையில் அதில்
தொடர்புடையவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவதும் உறுதிச் செய்யப்பட வேண்டும்.
அனைத்துலக ரீதியில்
கையூட்டுக் கொடுப்பது மற்றும் வாங்குவது முதலிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களைப் பிடித்து
சட்டத்தின் முன் நிறுத்தும் பொறுப்பு தனிப்பட்ட சட்ட திட்டங்களுக்குள் வரையப்பட வேண்டும்.
இதைத் தவிர்த்து வங்கித் தரப்பும் பண மோசடிக்கு எதிரான சட்ட திட்டங்களை முடுக்கி விடுவதோடு, இது தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து மேலோங்குவதை தடுக்க முயல வேண்டும்.
No comments:
Post a Comment