ஊழல் சமுதாயத்தின் எதிரி என்பது அனைவரும் அறிந்ததே.
இருப்பினும் இத்தகைய தெளிவு நம்மில் பலருக்கு காலம் கடந்தே ஏற்படுகிறது என்பது முற்றிலும் உண்மை.
வரக்கூடிய காலங்களில் ஊழலின் ஆபத்தையும், ஊழலால் ஏற்படும் விளைவுகளையும் சமுதாயத்தினர் குறிப்பாக இளையோர் பள்ளி பருவத்திலிருந்தே அறிந்திருப்பது மிக மிக அவசியம்.
இதனைக் கருத்தில் கொண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆரம்பப் பள்ளிகளில் ஊழல் எதிர்ப்பு வீரர்கள் எனும் வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
மாணவப் பருவம் தொடங்கியே இது போன்று ஊழல் தொடர்பான தெளிவுகளை அவர்களில் மனதில் பதிய வைக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடைப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இம்முறை பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய பாரதி ஆரம்ப தமிழ்பள்ளியில் பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
பள்ளியின் நான்காம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டுக்கு உட்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கல்வியைத் தவிர்த்து இது போன்ற சமுதாய சிந்தனையையும் மாணவர்களுக்கு புகட்டுவதன் மூலம் வருங்காலத்தில் ஊழலற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பது திண்ணம்.
இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்து பத்திரிக்கை நிருபர்களிடம் பேசியிருந்த பினாங்கு மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குநர் டத்தோ சாமரஜூ மாணிக்கம், இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளிகளில் நடத்தபடுவதால் நல்ல விஷயங்கள் மாணவர்கள் மூலம் மற்ற இளையோருக்கும் சென்று சேரும் என நம்பிக்கை தெரிவித்தார்.
No comments:
Post a Comment