Tuesday, September 8, 2015

அரசாங்க அமலக்க பிரிவுகளுக்கும் சுயேட்சை அமைப்புகளுக்கும் நல்ல புரிந்துணர்வு தேவை


மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் மீது அடுத்தடுத்து நடத்தப்பட்டு வந்த சில விசாரணைகள் அவ்வாணையத்திற்கு பெரும் சவாலாக இருந்து வந்ததுஇருப்பினும் அந்த சுயேட்சை அமைப்பு மிக நூதனமான மற்றும் சாமர்த்தியமான முறையில் அந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டது பலரின் கவனத்தை ஈர்த்த்து.

பிரச்சனையின் உச்சக்கட்டமாக எஸ்.பி.ஆர்.எம்மின் இரு உயர் அதிகாரிகள் பிரதமர் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அந்நிலை ஏற்பட்ட சில மணி நேரங்களில் மலேசியர்களில் பலர் அதனை எதிர்த்து குரல் கொடுத்தனர். ஒரு வகையில் இது அந்த ஆணையத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியோடு கூடிய இலவச விளம்பரம் எனலாம்.

மக்களின் கடும் எதிர்ப்புகள் மற்றும் அவ்வாணையத்தின் துணை உயர் ஆணையர் ஒருவரின் விட்டுக்கொடுக்காத மற்றும் எந்நேரமும் தனது அதிகாரிகளை பாதுக்காக்கும் தன்மையும், அவ்விரு உயர் அதிகாரிகளும் மீண்டும் தத்தம் பழைய பதவிகளில் தக்க வைப்பதற்கு பெருந்துணை புரிந்த்து.

முன்னதாக எஸ்.பி.ஆர்.எம் பிரதமர் துறையின் கீழ் தனித்த சுந்தந்திரம் இல்லாமல் செயல்பட்டு வருகிறது என பலரும் அரைக்கூவல் விடுத்து வந்தனர். அஃது பொய்யான ஒரு கூற்று என நடந்து முடிந்த இச்சம்பவங்கள் தெள்ளத் தெளிவாக புலப்படுத்தி விட்டன.
சுயேட்சையாகத் தான் ஒரு அமைப்பு செயல்படுகிறது என்பதற்கு இதனிலும் சிறந்த உதாரணம் ஒன்று தேவையா என்பது கேள்விகுறியே!

இதனிடையே நான் தலைமைப் பொறுப்பில் இருக்கும் வரை எஸ்.ஆர்.சி இன்டர்நேஷினல் நிறுவனம் மீதான விசாரணை தொடரப்படுவது திண்ணம்.’ அதோடு மட்டுமில்லாது, இது வரையில் ஏஸ்.பி.ஆர்.எம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எந்த ஒரு சதித் திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை, இனியும் நிச்சியம் அது நடக்காதுஎன எஸ்.பி.ஆர் எம்மின் உயர் ஆணையர் டான் ஶ்ரீ அபு காசிம் முகமது சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆணையம் சவால்மிக்க காலக்கட்டத்தை கடந்து வந்து கொண்டிருந்த சமய சந்தர்ப்பங்களில் உடல் நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதுக்கப்பட்டிருந்த அவரால் தொடர்ந்து வேண்டிய தலைமைத்தூவ உதவிகளைத் தர முடியாததை எண்ணியும் அவர் வருந்தியிருந்தார்.இருப்பினும் தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாட்களில் அநாவசியப் பிரச்சனைகள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.

இந்நிலையில் 1 எம்.டி.பி விசாரணைத் தொடர்பான தகவல்கள் கசிந்த விவகாரத்தில் மேலும் பல எஸ்.பி.ஆர் .எம் அதிகாரிகள் மீது விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த காவல் துறை சூழ்நிலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளது.இதனை நல்லதொரு முடிவென எஸ்.பி.ஆர் .எம் தரப்பு வரவேற்றுள்ளது.

இதில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எஸ்.பி.ஆர் .எம் தனது கடமையைச் செய்வதிலிருந்து தவறியதாக தெரியவில்லைஆனால் அந்த சுயேட்சை அமைப்பை அதன் பணியை செய்யவிடாமல் சில தரப்புகள் தடுப்பது மட்டும் உறுதியாக புலப்படுகிறது.

தொடர்ந்தாற்போல் அவ்வாணையத்தின் பல அதிகாரிகள் தடுத்து வைக்கப்படுவதோடு பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாலும்எஸ்.ஆர்.சி தொடர்பான விசாரணைகள் மேலும் தாமதமாவது குறிப்பிடத்தக்கது.

இதனால் விசாரணை தாமதமாவதாக பொது மக்கள் பலர் எஸ்.பி.ஆர் .எம் மீது குறைப்பட்டு கொள்வதையும் தவிர்க்க இயலாத நிலை ஏற்படுகிறது.
காவல் துறை அதன் கடமையை செய்வது இயல்பு என்ற போதிலும் சில சமயங்களில் அது எஸ்.பி.ஆர் .எம்மின் விசாரணைகளுக்கு இடையூராக இருப்பது மறுப்பதற்கில்லை.

எதிர் வரும் காலங்களில் இது போன்ற அரசாங்கத்திற்கு நேரடி தொடர்புடைய  அமலாக்க பிரிவுகள் மற்றும் நாட்டின் சுயேட்சை ஆணையங்களுக்கு இடையில் விசாரணை அடிப்படையில் நல்ல புரிந்துணர்வு இருப்பது மிக அவசியம்இதுவே அநாவசிய கருத்து வேறுபாடுகளை களைய வழிவகுக்கும் அதே வேளையில் சம்பந்தப்பட்ட விசாரணையை விரைவில் தீர்க்கவும் துணைப்புரியும்.

இதனிடையே விசாரணை ரீதியில் எஸ்.பி.ஆர்.எம் முழுக்க முழுக்க சுயேட்சையாக செயல்பட்டு வரும் போதிலும், அவ்வாணையத்தின் அதிகாரிகள் நியமனம், இடம் மாற்றம், மற்றும் பணியிட அலுவல்கள் ஆகியவையும் தனிபட்ட முறையில் அமைக்கப்படுவதே மிகச் சிறப்பு.

தற்போது எஸ்.பி.ஆர்.எம் பொதுச் சேவைத் துறையின் கீழ் அமைந்திருப்பது அனைவரும் அறிந்ததேஇது மாற்றப்பட வேண்டும். பொதுச் சேவை துறை அன்றி, தனி ஒரு சிறப்பு சேவையின் கீழ் இவ்வாணையம் அமைக்கப்பட்டால் இது முழு சுதந்திரமாக அமையும் என்பது திண்ணம்.

இதனைத் தவிர்த்து, எஸ்.பி.ஆர்.எம் மின்  உயர் ஆணையரின் நியமனமும் முழுவதுமாய் சுதந்திரமாக அரசர்களின் சபையில் முடிவு செய்யப்பட வேண்டும்எஸ்.பி.ஆர்.எம் மின் உயர் ஆணையருக்கு, நாட்டின் சட்ட துறை தலைவருக்கு நிகரான பொறுப்பும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

இத்தகைய மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் எஸ்.பி.ஆர் எம் எந்நிலையிலும் எந்த தரப்பினருக்கும் தலை வணங்காமல் தனது கடமைகளை சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும் செய்ய முடியும் என நிரூபிக்கலாம்.

தொடர்ந்து, எஸ்.பி.ஆர். எம் மின் சில ஆலோசனைகளும் அரசியல் சாசனத்திலும், நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்படுவது மிக முக்கியம்.
குறிப்பாக தேர்தலுக்காக்கவும், கட்சி நலன் கருதியும் வழங்கப்படும் நன்கொடைகள் கட்டாயம் கட்சியின் பொது வங்கிக் கணக்கில் மட்டுமே போடப்படுவதுடன் அது குறித்த வெளிப்படையாக ஒப்புதல்களும் தரப்பட வேண்டும்.

அந்த நன்கொடை பணத்தின் செலவறிக்கைகளும் கட்டாயம் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அதன் கணக்கறிக்கைகள் சம்பந்தப்பட்ட தரப்பிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த விஷயங்கள் ஏற்கனவே எஸ்.பி.ஆர்.எம்- ஆல்,பலமுறை பரிந்துரைக்கப்பட்டும், இன்னமும் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கபடாமல் இருப்பது சற்று வருத்தமளிக்கவே செய்கிறது

கூடிய விரைவில் இந்த பரிந்துரை அங்கீகரிக்கப்பட்டு அமலுக்கும் வரும் என எதிர்ப்பார்போம்.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வலுத்து வரும் ஊழல் குற்றங்களைக் களைவதில் எஸ்.பி.ஆர்.எம் நிச்சயம் ஒரு படி முன்னோக்கிச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.


No comments:

Post a Comment