மக்கள், மலேசிய
ஊழல் தடுப்பு ஆணையம் (எஸ்.பி.ஆர்.எம்) மீது கொண் டிருக்கும் நம்பகத்தன்மையை மேலும்
அதிகரிப்பதற்கும், நல்ல இரு வழி உறவை மேலோங்கச் செய்வதற்கும் நேரடி தொடர்பு திட்டத்தை
அவ்வாணையம் அமைத்துள்ளது.
ஏஸ் என்று அழைக்கப்படும்
இந்த நேரடி தொடர்பு சேவை இவ்வாண்டு இறுதியில் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
எந்த ஒரு விளக்கம்
கோரியும் மக்கள் அதிக நேரம் காத்திருப்பதை இந்த திட்டம் தவிர்க்க உதவுவது திண்ணம்.
இப்படி இணையம்
வாயிலாக தொடர்பில் இருப்பதால் ஆணையம் வழங்கும் எல்லாத் தகவல்களும் உடனுக்குடன் மக்களைச்
சென்றடையும் என்பதும் உண்மை.
தொடர்ந்து இந்த
திட்டம் செயல்பாட்டில் இருப்பதால் எஸ்.பி.ஆர்.எம் குறித்து அநாவசிய நிஜமற்ற தகவல்கள்
பரப்பப்படுவதையும் தடுக்க இயலும்.
மக்கள் மத்தியில்
ஏற்படும் சந்தேகங்களுக்கும், ஐயப்பாடுகளுக்கும் தீர்வு உடனடியாக கிடைப்பாதால் மக்கள்
அநாவசிய உண்மையற்ற செய்திகளை இனியும் நம்பமாட்டார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.
No comments:
Post a Comment