'மனம்' என்பது கோவில் என்றார்கள் நம் முன்னோர்கள். எத்துனை உண்மை அடங்கியிருக்கிறது இந்த பொன்னான வார்த்தைகளில். மனம் என்றுமே கோவிலாக மட்டுமே இருத்தல் வேண்டும். அந்த கோவிலில் நாம் விதைக்கும் எண்ணங்கள் தெய்வாதினமாக அமைந்திட வேண்டும். உயர்ந்த எண்ணகள் நம்மை உயர்வான, விசாலமான மனிதராக பிரதிப்பலித்திடும்.
ஒரு மிகப் பிரபலமான ஆங்கில பொன்மொழி சொல்கிறது, உன் சிந்தனைகளும் எண்ணங்களுமே உன் பிம்பங்கள். நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். ஆகவே என்றும் உயர்வாகவே எண்ணுங்கள், அத்தகைய எண்ணங்கள் உங்களை மென்மேலும் உயர்த்திக் காட்டும்.
எண்ணம் தெளிவாக இருப்பின் வாழ்க்கை எளிமையாகிவிடும். பல குழப்பங்களுடனும், அநாவசியப் பிரச்சனைகளுடனும் எண்ணம் குழம்பி இருப்பின் வாழ்க்கை நிதானம் இழந்து சிதைந்து விடுவதும் உண்டு.
ஆக என்றுமே மனத்தை தெளிவாக வைத்திருக்க முயற்சிப்போம். அதுவே ஆரோக்கியமான வாழ்வுக்கும் வழி வகுக்கும்.
- வளமான வாழ்க்கைக்கு, உயர்ந்த தெளிவான சிந்தனையே உரம்!
No comments:
Post a Comment