Monday, May 30, 2016

கேமரன் மலை விவகாரத்திற்கு சேர்ந்த ஒத்துழைப்பு அவசியம்.

மலையகத்தின் பரைசாற்றும் கம்பீர தோற்றமும், சில்லென வருடிக் கொடுக்கும் காற்றும் கேமரன் மலையின் சிறப்பு அம்சங்கள்.

நாட்டின் தலைச் சிறந்த சுற்றுலா தளங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்றது இந்த கேமரன் மலை. இருப்பினும் இதன் இயற்கை வளங்களுக்கு கண்ணிமைக்கும் வினாடியில் மரணம் நிகழ்ந்து விடும் எனும் வருத்தம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

சமீப காலங்களில் சட்ட விரோதமாக நடந்து வரும் காடுகள் அழிப்பு நடவடிக்கைகள் விவசாயத்துறை மற்றும் சுற்றுலாத்துறைக்கு மிகுந்த மறுட்டலாக அமைந்து வருகிறது.

இவ்விடம் தற்போது அதன் ஜன ரஞ்சக தன்மையை இழந்து வருவதையும் அவ்வப்போது  பலர் ஊடகங்கள் மூலம் படம் பிடித்து காட்டி வருகின்றனர்.

இத்தகைய சட்ட விரோத காடுகள் அழிப்பு நடவடிக்கைகள் நிகழ்வதற்கு பல காரணங்கள் இருக்கும் போதிலும், அதில் மிக முக்கியமானதாக 'ஊழல்' இருக்கலாம என்பது பலரின் கணிப்பு.

கேமரன் மலை மாவட்ட இலாக்காவிலும், நில அலுவலகங்களிலும் பணியில் இருக்கும் சில அதிகாரிகளின் பொறுபற்ற தன்மையினாலும் அவர்கள் கையூட்டு பெறுவதாலும் இந்த அசம்பாவிதங்கள் நிகழுவதாக பலர் தத்தம் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான (எம்.ஏ.சி.சி) யும் ஒப்ஸ் காடிங் துரித நடவடிக்கையின் மூலம் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஓப்ஸ் காடிங் 2 நடவடிக்கையும்  முடுக்கி விடப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக காடுகள் அழிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து  நாட்டுக்குள் நுழையும் அந்நிய தொழிலாளிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கும் நடவடிக்கையாகவும்  இது அமைகிறது.


மாநில நில அலுவலகம், கேமரன் மலை மாவட்ட இலாக்கா, எம்.ஏ.சி.சி,  தேசிய பாதுகாப்பு துறை என பல தரப்பினரின் இணைந்த ஒத்துழைப்போடு இந்த அதிரடி நவடிக்கை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இயற்கையை மாசு படுத்தும் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்து  நடப்பதிலிருந்து தடுக்க அனைத்து தரப்பினரின் இணைந்த நடவடிக்கை மிக அவசியம்.

ஒவ்வொரு இலக்காவும் சம்பந்தப்பட்ட மற்ற இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இந்த சட்ட விரோத நடவடிக்கையை முறியடிக்க முடியும் என்பது உண்மை. 




No comments:

Post a Comment